Advertisment

நீங்க வேணும்னா குறிச்சு வச்சுக்கோங்க “இனி எல்லாமே ஸ்மார்ட் க்ளாஸ் தான்”...

ஸ்மார்ட்போன்கள் தான் ஸ்மார்ட்க்ளாஸ்களின் விற்பனைக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கப் போகிறது .

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
smart glasses

smart glasses

 Anuj Bhatia 

Advertisment

Smart glasses could be key to the 5G future : குவால்கோம் சிப்செட்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய அந்நிறுவனத்தின் ப்ரோடெக்ட் மேனேஜ்மெண்ட் டீமின் வைஸ் பிரசிடெண்ட் கேதர் கோந்தப் இந்தியா வந்துள்ளார். எதிர்கால தொழில் நுட்பம் எவ்வாறு இருக்கும் என்று கேட்ட போது 5ஜி தொழில்நுட்பம் உலகெங்கும் சீராக பரவுகின்ற அதே நேரத்தில் ஸ்மார்ட்கிளாஸ்களின் பயன்பாடுகள் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

5ஜி துணையுடன் வெளியாக இருக்கும் 5G-powered extended-reality (XR) நுட்பம் ஆகுமெண்ட்டட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. எதிர் வருங்காலங்களில் ஏ.ஆர் ஹெட்செட்களுக்காக தனியாக சிப்செட்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.

இந்த வருடம் வையர்லெஸ் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடிய பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் மக்கள் மத்தியில் அறிமுகமாகும். முதல் தலைமுறை ஆகுமெண்டட் ரியாலிட்டி கண்ணாடிகள் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர் எந்த காலக்கட்டத்தில் ஸ்மார்ட்க்ளாஸ்கள் ஸ்மார்ட்போன்களை ரிப்ளேஸ் செய்யும் என்பதை சரியாக கணிக்க இயலவில்லை. அனைத்து செயல்பாடுகளும் இப்போது ஸ்மார்ட்போனில் தான் இருக்கிறது. ஆனால் நிச்சயமாக வருகின்ற காலத்தில் ஸ்மார்ட் க்ளாஸ்களில் அதிக அளவு மாற்றங்களும், புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகம் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்தபடியாக அதிக முக்கியத்துவம் கொண்டவையாக இருப்பது என்னவோ ஸ்மார்ட்போன்கள் தான். ஆனால் அதில் கஸ்டமர்களை நிலை நிறுத்தும் சிறப்பம்சங்கள் இல்லாமல் இருப்பது தோல்வியில் நிறுத்துகிறது. மேஜிக் லீப் என்ற நிறுவனம் அதிகப்படியாக முதலீடுகள் செய்து ஆகுமெண்ட்டட் ரியாலிட்டி கொண்டு வரப்பட்டது. ஆனால் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான ஆப்கள், ஏ.ஆர். கண்டெண்ட்டுகள் இல்லாததால் லீப் ஒன் ஹெட்செட் மக்கள் மத்தியில் பெரும் வரவேறிபினை பெறவில்லை. இதற்கு முந்திய காலங்களில் அப்படியான ஆப்கள் இல்லை. ஆனால் இந்த வருடத்தில் ஏ.ஆருக்காகவே ஆப்கள் கொண்டு வரப்பட்டு சுவாரசியமான விசயமாக இது மாற்றப்படும் என்றும் கூறினார் கோந்தப்.

Panasonic நிறுவனத்தின் ஏ.ஆர்

publive-image

ஏ.ஆர். க்ளாஸ்களுக்கு வரவேற்பு இருப்பதெல்லாம் உண்மை தான்ன். இருப்பினும், ஆகுமெண்டட் ரியாலிட்டியை நாம் பயன்படுத்த இன்னும் நிறைய காலம் தேவைப்படும். ஸ்மார்ட்போன்களின் இடத்தை இந்த க்ளாஸ்கள் பெறுவதற்கு இன்னும் வெகு காலம் இருக்கிறது. ஆனால் ஸ்மார்ட்போன்கள் தான் ஸ்மார்ட்க்ளாஸ்களின் விற்பனைக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கப் போகிறது என்றும் அவர் கூறினார்.

To read this article in English

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment