Smart Tv Under RS 15,000: கொரோனா ஊரடங்கால் பலரும் வீட்டிலேயே முடங்கிக்கிடந்ததன் காரணத்தினால், டிவி பார்ப்போரின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. இதன்காரணமாக, பல்வேறு முன்னணி டிவி நிறுவனங்கள் புதுப்புது வகைகளை எல்சிடி ஹெச்டி தரத்திலான டிவிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
ரூ.15 ஆயிரம் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிக்கள் சிலவற்றை இங்கு காண்போம்
LG HD Ready Smart LED TV
டிவி சந்தையில் முன்னணியில் உள்ள நிறுவனம் எல்ஜி. எல்ஜி நிறுவனத்தின் பட்ஜெட் டிவியான 32 இஞ்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.14,999 ஆக உள்ளது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியா, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி வசதிகளை கொண்ட இந்த டிவி WebOS மூலம் இயங்குகிறது. 2 HDMI port உள்ளன. ஒன்று செட்டாப் பாக்ஸ்க்கும் மற்றொன்று கேம்ஸ் விளையாடவும் பயன்படுகிறது. அதில் உள்ள USB port ஹார்ட் டிரைவ், பென் டிரைவ்களை இணைக்க உதவுகிறது. டிவியை வைபை மூலம் இணைக்கலாம். 10 வாட்ஸ் அவுட்புட் கொண்ட 2 ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் விர்சுவல் எக்ஸ் மற்றும் டால்பி ஆடியோ வசதி உள்ளது.
Samsung Wondertainment Series HD Ready LED Smart TV
சாம்சங் 32 இஞ்ச்ச ஹெச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.14,999 ஆக உள்ளது. ஓட்டி செயலிகள் வசதி இல்லாதபோதும், இந்த டிவியை நாம் பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைத்துக்கொள்ளலாம். டைஜன் ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 20 வாட்ஸ் ஸ்பீக்கர், டால்பி டிஜிட்டல் பிளஸ் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளது.
OnePlus Y Series HD Ready LED Smart Android TV 32Y1
ஒன்பிளஸ் நிறுவனம், டிவி சந்தையில் இந்தாண்டு ஜூலை மாதத்திலேயே நுழைந்தது. அதன் முதல் டிவியாக Y series அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.12,999 ஆக உள்ளது. அலெக்சா, குரோம்கேஸ்ட் உள்ளிட்ட வசதிகளை கொண்ட இந்த டிவி, ஆண்ட்ராய்ட் டிவி 9 ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. கலர் ஸ்பேஸ் மேப்பிங், டைனமிக் கான்ட்ராஸ்ட், ஆன்டி அலையசிங், காமா இஞ்ஜின் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், கூகுள் அசிஸ்டெண்ட் போன்ற ஓடிடி செயலிகளுக்காக சிறப்பு ரிமோட் உள்ளது. 20 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ வசதி உள்ளது.
Vu HD Ready UltraAndroid LED TV 32GA
Vu நிறுவனத்தின் அல்ட்ரா ஆண்ட்ராய்ட் 32 ஜிஏ எல்இடி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.12,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. A+ grade LED high brightness panel , MPEG noise reduction உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும். குரோம்கேஸ்ட் இன்பில்ட் ஆகவே உள்ள இந்த டிவி, ஆண்ட்ராய்ட் பை 9.0 ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 2 HDMI ports மற்றும் 2 USB ports உள்ளன. 20 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட், டால்பி ஆடியோ, டிடிஎஸ் ஸ்டூடியோ சர்ரவுண்ட் சவுண்ட் உள்ளது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், கூகுள் அசிஸ்டெண்ட் போன்ற ஓடிடி செயலிகளுக்காக தனியாக ரிமோட் உள்ளது.
Mi TV 4A PRO HD Ready Android LED TV
சியோமி நிறுவனமும், இந்தாண்டில் தான் டிவி சந்தையில் நுழைந்துள்ளது. Mi TV 4A PRO டிவியின் விலை ரூ.12,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டேட்டா சேவர் மோட் வசதி கொண்ட இந்த டிவி, பேட்ஜ்வால் ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 3 HDMI ports மற்றும் 2 USB ports உள்ளன. 20 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட், டால்பி பிளஸ் டிடிஎஸ் ஹெச்டி உள்ளது. ஒரே ரிமோட்டில், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோவுக்கான பட்டன்களும் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.