இந்தாண்டு தந்தையர் தினம் ஜுன் 16-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. எப்போது ஜுன் மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தாண்டு தந்தையர் தினத்தில் உங்கள் அன்பு தந்தையை மகிழ்விக்க, பரிசளிக்க சில பொருட்கள் இங்கு கூறப்பட உள்ளன. தனித்துவமான சில பொருட்களை வழங்கி தந்தையர் தினத்தை கொண்டாடுங்கள்.
Personalised ஸ்வெட்ஷர்ட்
உங்கள் தந்தைக்கு ஸ்வெட்ஷர்ட் அல்லது அவருக்கு பிடித்த ஆடை வாங்கி அதை கஸ்டமைஸ் செய்து கொடுங்கள். அதில் 'அப்பா', 'papa' , 'baba' என ப்ரிண்ட் செய்தும், அவர் பிறந்த வருடம் சேர்த்துக் கொடுக்கலாம். குழந்தைகள், பேரக்குழந்தைகளின் பெயர்களையும் கூட சேர்த்து எழுதலாம்.
Samsung Galaxy Fit3
Samsung Galaxy Fit3 ஆனது நீடித்த அலுமினிய டிசைன் உடன் 40mm AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்ட ஒரு நேர்த்தியான ஃபிட்னஸ் டிராக்கராகும். இது சாம்சங் ஹெல்த் ஆப் மூலம் இயக்கப்படும் மேம்பட்ட தூக்க பயிற்சி, SpO2, heart rate மற்றும் stress monitoring உள்ளிட்ட விரிவான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய கண்காணிப்பை வழங்குகிறது. 13 நாட்கள் வரை பேட்டரி லைவ் மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டுள்ளது. ப்ளுடூத் கனெக்டிவிட்டி உடன் வருகிறது. அமேசான் தளத்தில் ரூ.4899 விலையில் பெறலாம்.
Samsung Galaxy Buds Fe
Samsung Galaxy Buds Fe ஆனது புதிய 1-வே ஸ்பீக்கரை கொண்டுள்ளது. டீப் பேஸ் மூலம் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. நாய்ஸ் கேசிலேஷன் வசதி மற்றும் பிற வசதிகளை வழங்குகிறது. 30 மணி நேர பேட்டரி லைவ் போன்றவையும் வழங்குகிறது. இந்த இயர் பட்ஸ் ரூ.6599 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
OnePlus Buds 3
OnePlus Buds 3 சிறந்த ஆடியோ அனுபவத்தை 10.4mm+6mm டைனமிக் டூயல் டிரைவர்களுடன் வழங்குகிறது, டீப் ஃபேஸ், மென்மையான ட்ரெபிள் மற்றும் கிளியர் ஃவோக்கல் ஆகியவை வழங்குகிறது.
இந்த இயர்பட்கள் 49dB ஸ்மார்ட் அடாப்டிவ் Noise Cancellationஅம்சத்தைக் கொண்டுள்ளன, வெளிப்புற இரைச்சலைக் குறைப்பதன் மூலம் அதிவேக ஒலியை வழங்குகிறது. 44 மணி நேர பேட்டரி லைவ் வழங்குகிறது.
boAt Smart Ring
போட் ஸ்மார்ட் ரிங் என்பது பிரீமியம் செராமிக் மற்றும் மெட்டல் பில்டுடன் கூடிய ஸ்டைலான மற்றும் செயல்பாட்டு ஸ்மார்ட் துணைப் பொருளாகும். இது மியூசிக் பிளேபேக், புகைப்படம் எடுத்தல் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியும்.
ஒருங்கிணைந்த 6-அச்சு மோஷன் சென்சார் உள்ளுணர்வு தொடர்புகளை உறுதி செய்கிறது. இந்த ஸ்மார்ட் ரிங் உங்கள் செயல்பாட்டைக் கண்காணிக்கிறது, இதயத் துடிப்பு, ரத்த ஆக்ஸிஜன், தூக்க முறைகள் மற்றும் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கிறது. இது பாதுகாப்பிற்கான அவசரகால SOS அம்சத்தை உள்ளடக்கியது மற்றும் 5ATM வரை water-resistant திறன் கொண்டது, இது பல்வேறு செயல்பாடுகளுக்கு ஏற்றதாக அமைகிறது. இதை அமேசான் தளத்தில் ரூ.8999 விலையில் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“