இந்த ஆண்டில் ஸ்மார்ட்போன் உலகை ஆக்கிரமிக்கும் தொழில்நுட்பங்கள்!

Mobile Phone Future Trends : ஃபாஸ்ட் - சார்ஜிங் சார்ஜர்கள் இனி அனைத்து ஸ்மார்ட்போன்களுடன் வழங்குவதை இந்த வருடம் உறுதி செய்யும்.

By: Updated: January 3, 2020, 11:47:30 AM

Shruti Dhapola

Upcoming Mobile Technology 2020 : இந்த வருடம் ஸ்மார்ட்போன் உலகில் பல்வேறு மாற்றங்கள் நடக்க இருப்பது உண்மை. குறிப்பாக இந்தியாவில். Smartphones Trends 2020ல், இந்த வருடத்தில் செல்போன் உலகில் ஏற்பட இருக்கும் மாற்றங்கள் என்ன என்பதை இங்கே காண்போம்.

சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ… மகிழ்ச்சியில் சென்னை !

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?

சான்சப்ட் போன்ஸ் (Concept phones)

இந்த போன் டெக்னாலஜி ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் இது போன்ற போன்களை நிச்சயமாக தயாரிக்கும். ஆனால் இந்த வருடத்திலோ, அல்லது இன்னும் சில வருடங்களிலோ இந்த போன்கள் வெளியாவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. ஜனவரி 7ம் தேதி நடைபெற இருக்கும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் ஷோவில் ஒன்ப்ளஸ் நிறுவனம் தங்களின் முதல் கான்செப்ட் போன் பற்றிய அறிவிப்பினை வெளியிட உள்ளது. ஃபோல்டபிள் போன் பற்றிய முழுமையான பயன்பாடு குறித்து இன்னும் அறியாத நிலையில் ஃபோல்டபிள் போன்கள் மீது அதிக ஆர்வம் செலுத்தவில்லை ஒன் ப்ளஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

விவோவின் அபெக்ஸ் 2029 கான்செப்ட் போனை வெளியிட்டது. சியோமி நிறுவனம் போர்ட்கள் இல்லாத எம்.ஐ. மிக்ஸ் ஆல்ஃபா போன்களை வெளியிட்டது. இது போன்ற போன்களை வரும் வருடங்களில் எதிர்பார்க்கலாம். ஆனால் அவை அனைத்தும் ஃபோல்டபிள் போன்கள் இல்லை. மாறாக பெரிய திரை, கேமராக்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்பில் அவை வெளியாகும்.

 Smartphones Trends 2020

நிறைய கேமராக்கள், பெரிய கேமராக்கள்

ஏற்கனவே கடந்த ஆண்டில் 48 எம்.பி. மற்றும் 64 எம்.பி. கேமராக்கள் பொறுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள் அதிக அளவில் புழக்கத்திற்கு வந்துவிட்டது. 108 எம்.பி. கேமரா குறித்த அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகியும் விட்ட நிலையில் சியோமியின் எம்.ஐ. நோட் 10 சீரிஸில் இந்த கேமரா பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸியின் எஸ்11 அல்லது எஸ்20 சீரிஸில் இந்த 108 எம்.பி. கேமராக்கள் பொருத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 865 சிப்செட் 200எம்.பி. கேமராவை செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் வருங்காலத்தில் நிறைய மெகா பிக்சல்களை கொண்ட கேமரா போன்களை எதிர்பார்க்கலாம். எண்ணிக்கை வகையில் வரும் போது, ஏற்கனவே நான்கு, ஐந்து கேமராக்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் 2019ம் ஆண்டில் வெளியானது. அதே அளவில் ஆனால் இன்னும் துல்லியமாக செயல்படும் கேமராக்கள் ஸ்மார்ட்போன்களில் பொருத்தப்படலாம்.நன்றாக, சிறப்பான ஸூமிங் சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களும், 3டி ஃப்ளைட் சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன்களும் வருங்காலத்தில் அதிக அளவு எதிர்பார்க்கலாம்.

 Smartphones Trends 2020

5ஜி ஸ்மார்ட்போன்கள்

5ஜி தொழில்நுட்பம் குறித்து இன்னும் பல்வேறு திட்டங்கள் இன்னும் முழுமையான செயல்வடிம பெறவில்லை. உலக அளவில் 5ஜி தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை துவங்கும். இந்த வருடத்தில் முதல் போனாக ஐபோன் 12 வெளியாகலாம். சியோமி, ரியல்மி, ஒன்ப்ளஸ் போன்ற போன்கள் இந்த வருடத்தில் நிச்சயமாக ஒரு 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்த வருடத்தில் வெளிவிடும். 5ஜி ஸ்மார்ட்போன்களின் மிகப்பெரிய மார்க்கெட்டுகளாக சீனா, தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இருக்கும்.

பேட்டரிகள் செயல்திறன்

2019ம் ஆண்டு அதிக பேட்டரி செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்தது. மிகவும் மெல்லிய ஸ்மார்ட்போன்களிலும் கூட அதிக செயல்திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டிருந்தது. அதிக நேரம் பேட்டரி இருந்தால் அதிக வீடியோக்கள், அதிக பொழுதுபோக்கு என எல்லாம் சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபாஸ்ட் – சார்ஜிங் சார்ஜர்கள் இனி அனைத்து ஸ்மார்ட்போன்களுடன் வழங்கப்படுவதை இந்த வருடம் உறுதி செய்யும்.

மேலும் படிக்க : ஆன்லைனில் மளிகை பொருட்கள்… ஜியோவின் புது அட்வென்ச்சர்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Smartphones trends 2020 5g better camera battery life

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X