மின்சார கட்டணம் கட்டும் தேதி இரு மாதங்களுக்கு ஒருமுறை என்பதால் மக்கள் பலரும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துவருகின்றனர். கூடுதல் கட்டணம் கட்ட வேண்டி வருகிறது என்ற புகார் ஒரு பக்கம் என்றால் ஞாபக மறதியால் சிலர் கட்டணம் கட்டும் தேதியை நினைவில் வைக்க தவறிவிடுகின்றனர். இதனால் வீட்டில் இருக்கும் நபர்களுக்கு அசவுகரியம் ஏற்பட்டுவிடுகிறது. இதனை தவிர்க்க தமிழ்நாடு அரசு சூப்பர் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி இனிவரும் நாள்களில் இது, 3 நாள்களுக்கு முன்பே நினைவு படுத்தப்படும். இது குறித்து மின்சார வாரியம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது நினைவூட்டல் செய்தியை 3 நாள்களுக்கு முன்பு அனுப்புகிறது. ஆகவே குறித்த நேரத்தில் கட்டணம் செலுத்தி தாமதத்தை தவிர்க்கவும். டான்ஜெட்கோ தற்போது உங்கள் நம்பிக்கைக்குரிய தோழனும் கூட!” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் வசதிக்கு ஏற்ப டான்ஜெட்கோ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதில் முக்கியமானது வாட்ஸ்அப் மூலமாக கட்டணம் செலுத்தும் வசதி ஆகும். இதில் டான்ஜெட்கோ 94987 94987 (நம்பர்) இலச்சினை மற்றும் பச்சை குறியீடு காணப்படும். இதில வியூ பில் மற்றும் பே பில் ஆகிய ஆப்சன்கள் இருக்கும். இதில் நீங்கள் எந்தச் சிரமும் இன்றி மின்சார கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“