Advertisment

ஸ்னாப் சாட் மூலமாக இனி உங்களுக்குப் பிடித்தமான விளையாட்டில் திளைக்கலாம்..!

தேர்ட் பார்ட்டி ’கேம்’ உருவாக்குபவர்களை வைத்து புதிய செயலிகளை அறிமுகப்படுத்த திட்டம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Snap Chat

Snap Chat

குறுஞ்செய்தி செயலி ஒன்று, விளையாட்டுகளை உருவாக்கி அதில் தங்களுடைய வாடிக்கையாளர்களைக் கட்டிப் போடுவது ஒன்றும் புதிதல்ல. அதை ஸ்னாப் சாட்டும் செய்ய விரும்புகின்றது.  ஸ்னாப் சாட் இந்த வருட தொடக்கத்தில் புதிதாக லோகோவினை வெளியிட்டது. ஆனால் அது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பினைப் பெறாமல் போனது. மேலும் தன்னுடைய வாடிக்கையாளர்களையும் இழந்துவிட்டது. இழந்த வாடிக்கையாளர்களை மீட்பதற்காக 'ஆகுமெண்டட் ரியாலிட்டி’ வகையிலான புதிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியும் எந்த பலனும் இல்லை. அதனால் 'தேர்ட் பார்ட்டி’ விளையாட்டு உருவாக்குனர்களை நம்பி தற்போது களத்தில் இறங்கியிருக்கின்றது ஸ்னாப் சாட்.

Advertisment

ஸ்னாப் சாட்  ‘க்ரெடென்சியல்’களை பயன்படுத்தி புதிய செயலிகளை அக்செஸ் செய்து கொள்ளும் வசதியான ஸ்னாப்கிட்டை வெளிவிட்ட பின்பு கேம்களுக்கான புதிய தகவல்களை அளித்திருக்கின்றது ஸ்னாப் சாட். அதன்படி வருகின்ற 2018ம் ஆண்டு இலையுதிர் காலத்திற்குள் இந்த வசதியினை அறிமுகம் செய்ய இருக்கின்றது இந்நிறுவனம்.

மூன்றாம் பார்ட்டிகளின் மூலம் உருவாக்கப்படும் புதிய கேம்களை ஸ்னாப் சாட் மூலம் அறிமுகப்படுத்தினால் பயனாளிகளின் எண்ணிக்கை கூடும் என்றும், இழந்து போன வாடிக்கையாளர்களை திரும்பப் பெற இயலும் என்றும் நம்புகின்றது ஸ்னாப் சாட்.

மெசெஞ்ர்கள் மற்றும் இதர குறுஞ்செய்தி செயலிகள் வழியாக கேம்களை அறிமுகப்படுத்துவது ஒன்றும் புதிது இல்லை. வீ சாட் தன்னுடைய வருமானத்தின் 40%த்தினை கேம்கள் மூலமாகவே பெருகின்றது. தன்னுடைய இளம் பயனாளிகளை கணக்கில் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் அது இன்ஸ்டகிராமினை கொஞ்சம் நெருக்கடிக்கு உள்ளாக்கலாம். ஸ்னாப் சாட்டின் நிறைய சிறப்பம்சங்களை அப்படியே காப்பி அடித்து பயன்படுத்தி வருகின்றது இன்ஸ்டகிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment