சில மணி நேரம் திடீர் முடக்கம்... மீண்டும் செயல்பட தொடங்கிய எக்ஸ் தளம்!

தொழில்நுட்பம் கோளாறு காரணமாக உலகம் முழுதுவம் சமூக வலைதளமான எக்ஸ் தளம் இன்று காலை 11 மணி முதல் முடங்கிய நிலையில், தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியது.

தொழில்நுட்பம் கோளாறு காரணமாக உலகம் முழுதுவம் சமூக வலைதளமான எக்ஸ் தளம் இன்று காலை 11 மணி முதல் முடங்கிய நிலையில், தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியது.

author-image
WebDesk
New Update
Social media platform X down for users globally Tamil News

எக்ஸ் தளத்தில் பதிவு செய்ய முடிகிறது. ஆனால், பதிவுகளை பார்க்க முடிவயவில்லை என பயனர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் ஒன்று டிவிட்டர். தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவது, போட்டோக்கள் மற்றும் வீயோக்களை ஷேர் செய்வது என பலவற்றுக்கும் மக்கள் டிவிட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் என அனைத்தின் மூலம் டிவிட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிறுவனத்தை பிரபல தொழிலதிபரான எலன் மஸ்க் வாங்கினார். இதன்பிறகு, பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. ப்ளு டிக் வாங்குவதற்கு பணம், ட்விட்டர் என்கிற நிறுவனத்தின் பெயர் "எக்ஸ்" என்று மாற்றம் என பல்வேறு மாற்றங்களை எலன் மஸ்க் கொண்டு வந்தார். இதற்கு எதிராகவும், ஆதரவாகவும், பலரும் தங்களது கருத்துக்களை கூறி வந்தனர்.

திடீர் முடங்கம் 

இந்நிலையில், இன்று காலை 11 மணி முதல் எக்ஸ் சமூக வலைதளம் முடங்கியது. தொழில்நுட்பம் கோளாறு காரணமாக உலகம் முழுதுவம் சமூக வலைதளமான எக்ஸ் தளம் முடங்கியது. எக்ஸ் தளத்தில் பதிவு செய்ய முடிகிறது. ஆனால், பதிவுகளை பார்க்க முடிவயவில்லை என பயனர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். மேலும், XDown , TwitterDown என்ற ஹேஷ்டேக்கை மற்ற சமூக வலைதள பக்கங்களில் டிரெண்ட் செய்தனர்.

மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த எக்ஸ் 

இந்த நிலையில், தொழில்நுட்பம் கோளாறு காரணமாக உலகம் முழுதுவம் முடங்கிய சமூக வலைதளமான எக்ஸ் தளம் இன்று பிற்பகல் 1 மணி முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது. தொழில்நுட்பம் கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது எக்ஸ் சமூக வலைதளம்.

Advertisment
Advertisements

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Twitter

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: