/indian-express-tamil/media/media_files/2024/11/05/TjWWMPidb2XydIybOZHV.jpg)
சூரிய, சந்திர கிரகணங்கள் நமது சூரிய குடும்பத்தில் நிகழும் வானியல் நிகழ்வாகும். ஆண்டுக்கு 2,3 முறை இந்த நிகழ்வுகள் நடக்கிறது. சூரியன், நிலவு நகர்வதை வைத்து இந்த நிகழ்வுகள் ஏற்படுகிறது.
அந்த வகையில், 2024ஆம் ஆண்டைப் போலவே, 2025ஆம் ஆண்டிலும் இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் நிகழவுள்ளன. இதனுடன், அடுத்த ஆண்டு அனைவரும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் full blood moon நிகழ்வு நடைபெற உள்ளது.
2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மார்ச் 29 அன்று நிகழும். அது பகுதியளவு(Partial ) சூரிய கிரகணம் என்று கூறப்படுகிறது.
இது இந்திய நேரப்படி, மார்ச் 29 அன்று மதியம் 2.20 மணியளவில் தொடங்கி மாலை 6.13 மணியளவில் முடிவடையும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த கிரகணம் ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, வட, தென் அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் காண முடியும். அதே நேரம் இந்தியாவில் இந்த கிரகணத்தை காண முடியாது.
செப்டம்பர் 21, 2025: இதுவும் பகுதி சூரிய கிரகணமாக இருக்கும். இது ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் தெரியும். இந்தியாவில் பார்க்க முடியாது. இரவு 11 மணிக்கு கிரகணம் தொடங்கும் மற்றும் அதிகாலை 4 மணி வரை நீடிக்கும்.
மார்ச் 14, 2025: அடுத்த ஆண்டு முழு சந்திர கிரகணம்நிகழும். இது blood moon என்றும் கூறலாம். இந்த கிரகணம் அமெரிக்கா, கனடா மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் தெரியும். வட ஆபிரிக்காவின் மேற்குக் கடற்கரையில் அதிகாலையில் இதைக் காணலாம்.
செப்டம்பர் 7, 2025: இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதி நிகழும். இதுவும் இந்தியாவில் தெரியாது. இந்த கிரகணம் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் தெரியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.