Total solar eclipse Timing in India: நாளை ஜூலை 2ம் தேதி, தென் பசிபிக் பிராந்தியத்தில் முழு சூரிய கிரகணம் நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய கிரகணம், உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், இச்சூரிய கிரகணம் குறித்த முக்கிய தகவல்களை நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.
சூரிய கிரகணம் என்றால் என்ன?
சூரியனின் மையப்பகுதி மட்டும் நிலவினால் மறைக்கப்பட்டு, விளிம்புப்பகுதி மறைக்கப்படாமல் இருக்கும் போது, ஒரு ஒளி-வளையம் போன்ற தோற்றத்துடன் சூரியன் காட்சியளிக்கும். இதுவே சூரிய கிரகணம் என்றழைக்கப்படுகிறது.
மேலும் படிக்க - நாளை முழு சூரிய கிரகணம்... இந்த வருடத்தில் வேறென்றும் சூரிய கிரகணம் இல்லை!
எந்த நாட்டில் நேரடியாக பார்க்க முடியும்?
இந்த சூரிய கிரகணம் சிலி, அர்ஜென்டினா, ஈகுவடார், பிரேசில், உருகுவே, பராகுவே மற்றும் தென் பசிபிக் பெருங்கடல் அருகிலுள்ள பகுதிகளில் தெளிவாகக் காண முடியும். மொத்தமாக 4 நிமிடம் 33 நொடிகள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. EDT நேரத்தின் படி 12:55 மணிக்கு இந்த கிரகணம் தொடங்குகிறது. இந்திய நேரத்தின்படி இரவு 10.25 மணிக்கும் நிகழும் என்பதனால் இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க இயலாது.
இருப்பினும் ஆன்லைனில் நேரலையாக மக்கள் இந்த சூரிய கிரகணத்தைக் காணலாம். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள எக்ஸ்ப்ளோரேடோரியம் மியூசியத்தின் www.exploratorium.edu என்ற இணைய தளம் வாயிலாக அனைவரும் இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும். இந்திய நேரப்படி விடியற்காலை 12:53 மணி முதல் இதன் நேரடி ஒளிபரப்பு தொடங்கும்.
தவிர, இந்த மியூசியம் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் பயனாளர்களும் பார்க்கும் வகையில் பிரத்யேக ஆப்களை உருவாக்கியுள்ளது. பிளே ஸ்டோரில் இருந்து அதை டவுன் லோட் செய்தும் சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
வெறும் கண்களால் காணலாமா?
வெறும் கண்களுடன் இந்த கிரகணத்தை பார்க்கக் கூடாது. சூரிய கிரகணத்துக்கு என்று உள்ள பிரத்யேக கண்ணாடிகள் மூலம் மட்டுமே, நேரடியாக இதனை பார்க்க வேண்டும். சாதாரண சன் கிளாசஸ் அணிந்தும் பார்க்கக் கூடாது.