By: WebDesk
Updated: December 26, 2019, 08:43:21 AM
solar eclipse, solar eclipse 2019
Suriya Kiraganam 2019 Tamil: கடந்த பத்தாண்டுகளைக் கணக்கிட்டால், இதன் கடைசி சூரிய கிரகணம் இன்று தென்னிந்தியாவில் நிகழ்கிறது. கிரகணத்தின் போது, சூரியன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ‘நெருப்பு வளையமாக’ தோன்றும் என்பது இதிலுள்ள மற்றொரு அதிசயம். இந்த சூரிய கிரகணம் சரியாக இன்று காலை 8 மணியில் இருந்து தொடங்குகிறது. காலை 11:16 மணியளவில் கிரகணம் நிறைவடையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த இடைவெளிக்குள் சரியாக 9.30 மணியளவில் சூரியன் ‘நெருப்பு வளையமாக’ காட்சி தரும்.
வானில் நிகழும் இந்த அதிசய நிகழ்வுகளை தென்னிந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், மற்றும் ஐரோப்பா, ஆஃப்ரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியாவின் சில குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து காணலாம்.
சூரிய கிரகணம் என்றால் என்ன ?
சூரியனுக்கும் நிலவுக்கும் இடையேயான தூரம் என்பது சராசரி இடைவெளியை காட்டிலும் மிக அதிகம் என்பதால் நம்மால் முழுமையான சூரிய மறைப்பை காண இயலாது. மாறாக நிலவின் பரப்பு சூரியனை மறைத்ததிற்கு பிறகு முழுமையான வட்டவடிவ வில்லாக (Ring of Fire) சூரியன் தகிப்பதை காண இயலும்.
மங்களூரு – கர்நாடகா – இந்தியா
காஸர்காட் – கேரளா – இந்தியா
தலச்சேரி – கேரளா – இந்தியா
கோழிக்கோடு – கேரளா – இந்தியா
பாலக்காடு – கேரளா – இந்தியா
கோவை – தமிழ்நாடு – இந்தியா
ஈரோடு – தமிழ்நாடு – இந்தியா
கரூர் – தமிழ்நாடு – இந்தியா
திண்டுக்கல் – தமிழ்நாடு – இந்தியா
சிவகங்கை – தமிழ்நாடு – இந்தியா
திருச்சி – தமிழ்நாடு – இந்தியா
புதுக்கோட்டை – தமிழ்நாடு – இந்தியா
மும்பை, பெங்களூரு, புதுடெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், போபால், ஜெய்ப்பூர், சண்டிகர் போன்ற நகரங்களிலும் நீங்கள் இந்த நிகழ்வை காண இயலும். காலை 8 மணி 17 நிமிடங்களுக்கு இந்த சூரிய கிரகணம் ஆரம்பமாகிறது. சரியாக 09:30 மணிக்கு உச்ச நிலையை அடைகிறது இந்த கிரகணம். முடிவடைய 10:57 மணி ஆகும். ஆக 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு இந்த சூரிய கிரகணம் நடைபெறுகிறது. வெற்றுக் கண்களாலோ, உங்களின் ஆர்டினரி சன் க்ளாஸ்களாலோ இதனை நீங்கள் காண்பதை தவிர்க்க வேண்டும்.