உலக நாடுகள் மிகவும் எதிர்பார்த்த முழு சூரிய கிரகணம் நேற்று இரவு தென்பட்டது. நிலவு சூரியனை முழுமையாக மறைத்து கடந்து செல்லும் நிகழ்வு முழு சூரிய கிரகணம் ஆகும். இது வாழ்நாளில் ஒருமுறை நிகழும் அரிய நிகழ்வாகும். குறிப்பாக வட அமெரிக்கா முழுவதும் அரிய முழு சூரிய கிரகணம் தென்பட்டது.
ஏப்ரல் 8, திங்கட்கிழமை இந்திய நேரப் படி இரவு 9.13 மணிக்குத் தொடங்கி ஏப்ரல் 9, செவ்வாய்கிழமை அதிகாலை 2.22 மணி வரை கிரகணம் நீடித்தது.
சந்திரனின் அம்ப்ரா, அதன் நிழலின் இருண்ட பகுதி, பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி குடியரசின் தெற்கே 998 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய நேரப் படி இரவு 10.09 மணிக்கு கடந்து சென்றது. எனினும் இந்தியாவில் இந்த கிரகணம் தென்படவில்லை. ஆசிய நாடுகளில் இந்த கிரகணம் தென்படவில்லை. இருப்பினும் இந்தியாவில் முழு சூரிய கிரகணம் மார்ச் 20,2034-ம் ஆண்டு நிகழும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
முழு சூரிய கிரகணத்தின் அழகிய காட்சிகள்
நியூயார்க்கில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் முழு சூரிய கிரகணத்தை காண திரண்ட மக்கள்
விண்வெளி வீரர்களின் பார்வையில் முழு சூரிய கிரகணம்
வைரம் மோதிரம் போல் ஜொலித்த கிரகண காட்சி
மெக்சிகோவில் முழு சூரிய கிரகணம்