Advertisment

அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது?

2020 Solar Eclipse: ஆண்டின் இரண்டாவது, சூரிய கிரகணம் டிசம்பர் 14 அன்று  நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update
Lunar eclipse, solar eclipse 2020

Lunar eclipse, solar eclipse 2020

Solar Eclipse, Lunar Eclipse Date, Timings :  இந்த ஆண்டில் இரண்டு வருடாந்திர சூரியக் கிரகணம் நிகழ்வுகள் உள்ளன. முதலாவது ஏற்கனவே ஜூன் 21 அன்று நடந்தது. இரண்டாவது, சூரிய கிரகணம் டிசம்பர் 14 அன்று  நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது,முழு சூரிய ஒளியை நிலவு முழுமையாக மறைக்கும் என்பதால், இதற்கு  முழு சூரிய கிரகணம் என்று பெயரிடப்பட்டுள்ளது . அடுத்த சூரிய கிரகணம் ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், அண்டார்டிகா ஆகிய பகுதிகளில் தெரியும் என்று Timeanddate.com வலைதளம் தெரிவித்தது .

Advertisment

இந்த ஆண்டில் ஒரே ஒரு சந்திர கிரகண நிகழ்வு  மட்டுமே எஞ்சியுள்ளது. இது வரும் நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நிகழும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதுவும், புறநிலை சந்திர கிரகணமாக நிலகும். புவியின் நிழலை கருநிழல் (Umbra) மற்றும் புறநிழல் (Penumbra) என்று இருவேறு பகுதிகளாக ஆய்வலார்கள் பிரிக்கின்றனர்.

publive-image

 

சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருக்கும்போது சந்திரன் புவியின் கருநிழல் மையத்தில் மறைக்கப்படும்.

சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இல்லாதபோது, பூமியின் நிழலின் வெளிபகுதியான பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழுவதை புறநிழல் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

publive-image Source : Timeanddate.com

 

2020 ஆம் ஆண்டில் முதல் இரண்டு சந்திர கிரகணங்கள் பெனும்பிரல்  (புறநிழல்) சந்திர கிரகணங்கள். முதல் கிரகணம்  ஜனவரி 10 ம் தேதியும், இரண்டாவது  மறைப்பு ஜூன் 5 - 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அடுத்த சந்திர கிரகணமும் ஒரு பெனும்பிரல் ஆகும். இது நவம்பர் 30 ஆம் தேதி இந்தியாவில் தெரியும்.

சூரியக் கிரகணம் என்றால் என்ன:  சூரியன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது சூரியக் கிரகணம்  ஏற்படுகிறது. ஜூன் 21-ஆம் தேதி  நிகழ்ந்த சூரியகிரகணத்தின் போது, சந்திரனின் வெளிப்புற அளவு சூரியனை விட 1 சதவீதம் சிறியதாக  இருந்ததால், சூரியன் கடிக்கப்பட்ட ஆப்பிள் வடிவத்தில் தெரிந்தது.

publive-image Source : Timeanddate.com

 

சூரிய கிரகணத்தின் போது நிலவின் நிழல் புவியின் ஒருசில பகுதிகளில் மட்டுமே விழுவதால் மற்ற இடங்களில் அதைக் காண இயலாமல் போகிறது.

 

Solar Eclipse Lunar Eclipse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment