அரிய சூரிய கிரகணம்: தமிழகத்தில் எந்தெந்த ஊர்களில் பார்க்கலாம்?

Surya grahan 2020 in tamil nadu: ஜூன் 21 ஆம் தேதி நிகழவிருக்கும் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணத்தை தமிழகத்தில் சென்னை, வேலூர், திருச்சி, கோயம்புத்தூர், மதுரை மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஊர்களிலும் வடமாநிலத்தில் சமோலி, டெஹ்ராடூன், ஜோஷிமத், குருக்‌ஷேத்ரா, சிர்ஸா மற்றும் சூரத்கர் ஆகிய…

By: Updated: June 21, 2020, 10:15:12 AM

Solar eclipse news in tamil: ஜூன் 21 ஆம் தேதி நிகழவிருக்கும் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணத்தை தமிழகத்தில் சென்னை, வேலூர், திருச்சி, கோயம்புத்தூர், மதுரை மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஊர்களிலும் வடமாநிலத்தில் சமோலி, டெஹ்ராடூன், ஜோஷிமத், குருக்‌ஷேத்ரா, சிர்ஸா மற்றும் சூரத்கர் ஆகிய இடங்களிலும் பார்க்க இயலும்.

அரிய சூரிய கிரகணம்: தமிழகத்தில் எந்தெந்த ஊர்களில் பார்க்கலாம்?

Solar eclipse 2020 date and time: சூரிய கிரகணம் 2020 நேரம்

இது போன்ற வளைய சூரிய கிரகணம் இதற்கு முன் ஜனவரி 15 2010 மற்றும் டிசம்பர் 26, 2019 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நிகழ்ந்தது. ஜூன் 21 ஆம் தேதி நிகழும் வளைய சூரிய கிரகணத்துக்கு பிறகு இந்தியாவில் மே 21, 2031 ஆம் ஆண்டு தான் இது போன்ற கிரகணம் நிகழ உள்ளது.

வானில் ஒரு அதிசயம் ; தமிழக மக்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு தான்!

சென்னையில் காலை 10:22 மணிக்கு தொடங்கும் கிரகணம் மதியம் 1.41 மணிக்கு முடியும். உச்சகட்ட கிரகணம் பகல் 11:58 மணிக்கு நிகழும்.

உச்சகட்ட கிரகண காலத்தில் சூரியனின் வட்டில் 34 சதவிகிதம் சந்திரனால் மறைக்கப்பட்டிருக்கும். சென்னையில் பகுதி அளவு சூரிய கிரகணத்தை தான் காண முடியும்.

எக்காரணம் கொண்டும் வளைய சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் நேரடியாக பார்க்க கூடாது. தொலைநோக்கி அல்லது பைனாகுலரை ஒரு ட்ரைபாடில் (tripod) பொருத்தி அதன் வழியே வரும் சூரியனின் பிம்பத்தை ஒரு வெள்ளை பரப்பில் விழச்செய்து பார்ப்பதே மிகவும் செலவு குறைந்த பாதுகாப்பான வழி. வெறும் கண்களால் பார்க்க முயற்சிக்கும் போது நிரந்தர கண் பாதிப்பு அல்லது கண் பார்வை இழப்பு போன்றவை ஏற்பட வாய்புள்ளது.

சந்திரன் பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வரும். இதனால் சில நேரம் சந்திரன் பூமிக்கு அருகில் வருகிறது சில நேரம் பூமிக்கு வெகு தொலைவில் செல்கிறது. அது தொலைவில் இருக்கும்போது, பூமியிலிருந்து பார்க்கும் போது சந்திரனின் வெளிப்படையான அளவு சற்று குறைகிறது. இந்த நேரத்தில் சூரிய கிரகணம் நிகழ்ந்தால், சந்திரனால் முழு சூரியனையும் மறைக்க முடியாது. உச்ச கட்ட கிரகணத்தின் போது மறையாத சூரியனின் விளிம்பு பகுதிகள் நெருப்பு வளையம் போல் சந்திரனை சுற்றி இருக்கும். இது தான் வளைய சூரிய கிரகணம் எனப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:How to see rare annular eclipse of sun on june 21 from chennai and tamil nadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X