Advertisment

நாளை நிகழும் அரிய சூரிய கிரகணம்: இந்தியாவில் 'லைவ்' பார்ப்பது எப்படி?

Solar Eclipse 2023: இந்தியாவில் இந்த அரிய சூரிய கிரகணத்தை காண முடியாது. இருப்பினும் நாசா மற்றும் பல்வேறு தொலைக்காட்சிகள் வழங்கும் நேரடி ஸ்ட்ரீமிங் மூலம் சமூக வலைதளங்களில் காணலாம்.

author-image
WebDesk
New Update
Giant solar eruption that hit Earth, Moon, and Mars

'Ring Of Fire' Solar Eclipse 2023:  நாளை (அக்டோபர் 14)  வானில் அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இது வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் நன்கு தெரிய உள்ளது. இந்த நிகழ்வை காண அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் இந்த அரிய  கிரகணம் அடுத்து 2046-ம் ஆண்டில் தான் பார்க்க முடியும் என தி இன்டிபென்டன்ட் தெரிவித்துள்ளது.

Advertisment

மேலும், மேற்கு அரைக் கோளத்தில் (Western Hemisphere) வசிக்கும் மில்லியன் கணக்கான மக்கள் இந்த அரிய நிகழ்வை காண முடியும் எனவும் நாசா தெரிவித்துள்ளது. எனினும் இந்த அரிய கிரணகத்தை இந்தியாவில் காண முடியாது. நாசா இந்த நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது.  

நாளை (அக்டோபர் 14)  சனிக்கிழமை இரவு 9 மணியளவில் நாசாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில்  அரிய சூரிய கிரகண நிகழ்வை காணலாம்.  அதோடு நாசாவின் பேஸ்புக், X பக்கம் மற்றும் இதர சமூக வலைதளங்கள் வழியாகவும் இந்த நிகழ்வை நேரலையில் காணலாம்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Nasa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment