/indian-express-tamil/media/media_files/2025/06/12/JKFm6wy9NsCIorYGyJ5D.jpg)
இதற்கு முன் யாரும் பார்த்திராத காட்சி: சூரியனின் தென் துருவத்தின் முதல் புகைப்படம்!
First view of the suns south pole filmed by spacecraft: ஐரோப்பிய விண்வெளி மையத்தின் சோலார் ஆர்பிட்டர் முதல்முறையாக சூரியனின் தென் துருவத்தை படம் பிடித்து சாதனை படைத்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் சோலார் ஆர்பிட்டர் நெருப்புக் குழம்புகளை கொப்பளிக்கும் சூரியனின் தென் துருவத்தின் வீடியோவை பகிர்ந்துள்ளது.
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சூரியனின் செயல்பாடுகள் மற்றும் விண்வெளி வானிலை குறித்த நமது அறிவை விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோலார் ஆர்பிட்டர் விண்கலம், நாசா உதவியுடன் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது சூரியனை மிக அருகில் சென்று ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளது. சோலார் ஆர்பிட்டரின் இந்த புதிய கண்டுபிடிப்புகள், நமது நட்சத்திரமான சூரியனைப் பற்றிய நமது புரிதலை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.