/tamil-ie/media/media_files/uploads/2023/07/New-Project4-1.jpg)
Sony slashes PlayStation 5 price in India
சோனி தனது ப்ளே ஸ்டேஷன் 5 கன்சோலுக்கான வரையறுக்கப்பட்ட கால சலுகையை இந்தியா மற்றும் சில நாடுகளில் அறிவித்துள்ளது. பிளே ஸ்டேஷன் 5 மாடல் இந்தியாவில் ரூ.7,500 விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.49,990க்கு விற்கப்படும் பிளே ஸ்டேஷன் 5, சலுகை விலையில் ரூ.42,490க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை இச்சலுகை இருக்கும் என்றும் சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. சுமார் 16 % தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு பிளே ஸ்டேஷன் 5 மாடலை சோனி அறிமுகம் செய்தது. தற்போது வரை 40 மில்லியன் பிளே ஸ்டேஷன் 5 மாடல்கள் விற்பனை ஆகியுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக நிறுவனம் தள்ளுபடி அறிவித்துள்ளது என்று கூறப்படுகிறது. அதோடு இந்தாண்டு பி.எஸ்5 ஏற்றுமதியும் அதிகரித்ததாக நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் சோனி நிறுவனம் பி.எஸ்5 ஸ்லிம் மாடல் அறிமுகம் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு டிஸ்க் டிரைவுடன் சோனி பி.எஸ் 5 விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்பபட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.