லேக் இனி இல்லை... சோனியின் முதல் வயர்லெஸ் கேமிங் ஸ்பீக்கர் 'பல்ஸ் எலிவேட்' அறிமுகம்!

சோனி நிறுவனம், சமீபத்திய 'ஸ்டேட் ஆஃப் ப்ளே' நிகழ்வில் கேமர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'பல்ஸ் எலிவேட்' வயர்லெஸ் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

சோனி நிறுவனம், சமீபத்திய 'ஸ்டேட் ஆஃப் ப்ளே' நிகழ்வில் கேமர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'பல்ஸ் எலிவேட்' வயர்லெஸ் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
Sony Pulse Elevate

லேக் இனி இல்லை... சோனியின் முதல் வயர்லெஸ் கேமிங் ஸ்பீக்கர் 'பல்ஸ் எலிவேட்' அறிமுகம்!

கேமிங் பிரியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர்களை சமீபத்தில் நடந்த 'ஸ்டேட் ஆஃப் ப்ளே' (State of Play) நிகழ்வில் சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கேமிங் ஸ்பீக்கர்களின் பெயர் - 'Pulse Elevate'. லேக் (Lag) அல்லது ஆடியோ தாமதம் என்பது கேமர்களுக்கு விரக்தியடைக்கூடிய விஷயம். இந்த புதிய Pulse Elevate ஸ்பீக்கர்கள், ஆடியோவில் எந்தவித தாமதமும் இல்லாமல் (Lag-free) துல்லியமான கேமிங் அனுபவத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன.

Advertisment

இந்த Pulse Elevate ஸ்பீக்கர்கள் 2026-ம் ஆண்டில் அறிமுகமாக உள்ளன. இது 'மிட்நைட் பிளாக்', 'ஒயிட்' ஆகிய 2 நிறங்களில் கிடைக்கும். ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்ற Pulse Elite வயர்லெஸ் ஹெட்செட் மற்றும் Pulse Explore வயர்லெஸ் இயர்பட்ஸ் வரிசையில் இணைகிறது. இதன் விலை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. உலகளாவிய அறிமுகத்திற்குப் பிறகு, இந்த ஸ்பீக்கர்கள் இந்தியாவிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேமர்களுக்காக பிரத்யேக அம்சங்கள்:

சோனியின் பல்ஸ் எலிவேட் ஸ்பீக்கர்களில் இருக்கும் தொழில்நுட்ப அம்சங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும்.

சக்திவாய்ந்த டிரைவர்கள்: இதில் பிளானர் மேக்னடிக் டிரைவர்கள் (Planar Magnetic Drivers) பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை கேட்கக்கூடிய முழு ஆடியோ அலைகளையும் துல்லியமாகக் கடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Advertisment
Advertisements

3D ஆடியோ: பி.எஸ்-5ல் விளையாடும்போது, இந்த ஸ்பீக்கர்கள் Tempest 3D AudioTech உடன் இணைந்து செயல்படும். இதனால், எதிரிகள் எந்த திசையில் இருக்கிறார்கள் என்பதை துல்லியமாக உணர்த்தும் (Sharper Positional Audio). மேலும், உள்ளமைக்கப்பட்ட ஊஃபர்கள் (Woofers) மூலம் பேஸ் சத்தம் அதிகரிக்கப்பட்டு, அதிரடி அனுபவம் கிடைக்கும்.

ஏ.ஐ. மைக்ரோஃபோன்கள்: ஸ்பீக்கரின் வலது பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) சத்தம் நீக்கும் வசதியுடன் மைக்ரோஃபோன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது பின்னணி இரைச்சலைக் குறைத்து, ஹெட்செட் இல்லாமலேயே தெளிவாக வாய்ஸ் சாட் (Voice Chat) செய்ய உதவுகிறது.

பல்ஸ் எலிவேட் ஸ்பீக்கர்கள் பலவிதமான சாதனங்களுடன் இணைவதற்கும், பயன்படுத்துவதற்கும் வசதியாக உள்ளன. PlayStation Link இணைப்பு மூலம் PS5, PC, Mac, PlayStation Portal ஆகியவற்றில் குறைந்த தாமதத்துடன் (Ultra-Low Latency) துல்லியமான ஆடியோவை அனுபவிக்கலாம். இதில் ப்ளூடூத் ஆதரவும் இருப்பதால், கேமில் வரும் சத்தத்துடன் நீங்கள் விரும்பும் பாடல்களைக் கலக்கவோ அல்லது அழைப்புகளுக்கு பதிலளிக்கவோ முடியும்.

ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி இருப்பதால், இதனை நீங்கள் எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய (Portable) வகையில் பயன்படுத்தலாம். டெஸ்க்டாப் பயன்பாட்டிற்கு சார்ஜிங் டாக்குகள் (Charging Docks) உள்ளன. ஒலி (Volume), திசை (Orientation) போன்றவற்றை ஸ்பீக்கரில் இருந்தே நேரடியாகச் சரிசெய்யலாம். PS5 மற்றும் PC மெனுக்கள் மூலம் EQ மற்றும் மைக் செட்டிங்ஸ்களை மாற்றிக் கொள்ளலாம். இந்த Sony Pulse Elevate ஸ்பீக்கர்கள், கேமிங் ஆடியோவில் ஒரு புதிய தரத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: