கேமிங் கன்சோல் உலகின் அடுத்த பாய்ச்சல்: பி.எஸ்6-ல் மட்டுமே கிடைக்கும் பிரத்யேக அம்சங்கள்!

பி.எஸ்-6ல் மிக யதார்த்தமான லைட்டிங்கிற்காக (ரே ட்ரேசிங்) Radiance Cores எனப்படும் பிரத்யேக ஆஃப்களும், அதிக பிரேம் ரேட்டுகளுக்காக Universal Compression என்ற புதிய டேட்டா தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

பி.எஸ்-6ல் மிக யதார்த்தமான லைட்டிங்கிற்காக (ரே ட்ரேசிங்) Radiance Cores எனப்படும் பிரத்யேக ஆஃப்களும், அதிக பிரேம் ரேட்டுகளுக்காக Universal Compression என்ற புதிய டேட்டா தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

author-image
WebDesk
New Update
PlayStation 6

கேமிங் கன்சோல் உலகின் அடுத்த பாய்ச்சல்: பி.எஸ்6-ல் மட்டுமே கிடைக்கும் பிரத்யேக அம்சங்கள்!

சோனியின் அடுத்த தலைமுறை கேமிங் கன்சோலான பிளேஸ்டேஷன் 6 (PS6) வெளியாவதற்கு இன்னும் "சில ஆண்டுகள்" காத்திருக்க வேண்டி இருக்கும் என்றாலும், அதன் உள்ளே நிகழவிருக்கும் கிராபிக்ஸ் புரட்சி குறித்த தகவல்கள் இப்போதே வெளியாகியுள்ளன. பி.எஸ்-5 மற்றும் பி.எஸ்-5 ப்ரோவின் முதன்மை வடிவமைப்பாளரான மார்க் செர்னி மற்றும் ஏ.எம்.டி. (AMD)-ன் ஜாக் ஹூயின்க் ஆகியோர், இந்த எதிர்காலக் கன்சோலுக்காக உருவாக்கப்பட்டு வரும் அதிநவீன கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களைப் பற்றிப் பேசியுள்ளனர்.

Advertisment

விளக்கப்பட்டுள்ள இந்த அனைத்து தொழில்நுட்பங்களும் தற்போது 'உருவகப்படுத்துதலில் (Simulation)' மட்டுமே இருந்தாலும், சோனியின் அடுத்த இலக்கு, கேமிங் உலகின் தரத்தை முற்றிலுமாக மாற்றுவது என்பது தெளிவாகத் தெரிகிறது.

மிக யதார்த்தமான கேம் உலகங்களை உருவாக்கப் பயன்படும் ரே ட்ரேசிங் மற்றும் பாத் ட்ரேசிங் போன்ற சிக்கலான விஷுவல் எஃபெக்ட்களைக் கையாள்வதில், "தற்போதைய அணுகுமுறை அதன் உச்சவரம்பை அடைந்துவிட்டது" என்று மார்க் செர்னி திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதன் காரணமாகவே, சோனியும் ஏ.எம்.டி-யும் இணைந்து, AMD-ன் புதிய RDNA கட்டமைப்புச் சிறப்பம்சங்களை அடுத்த தலைமுறை PS6 ஹார்டுவேரில் ஒருங்கிணைத்து வருகின்றனர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இந்த முயற்சியின் மையப்புள்ளிதான் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Radiance Cores. இவை, ரே ட்ரேசிங் மற்றும் பாத் ட்ரேசிங் ஆகியவற்றை நிர்வகிப்பதற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஆஃப்களாகும். இந்த கோர்கள், நிஜ உலக விளக்குகளின் ஒளியையும் நிழலையும் உருவாக்கும் சிக்கலான பணிகளை ஏற்றுக்கொள்வதால், GPU-வின் மற்ற பகுதிகள் ஷேடர்கள், டெக்ஸ்சர்களை மிக வேகமாகச் செயலாக்க முடியும். இதன் மூலம் ஒட்டுமொத்த செயல்திறனும் பல மடங்கு அதிகரிக்கும். இந்த Radiance Cores, PS6 கன்சோல்களில் மட்டுமல்லாமல், AMD-ன் எதிர்கால டெஸ்க்டாப் GPU-களிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment
Advertisements

கிராபிக்ஸ் தரத்தை உயர்த்த மற்றொரு முக்கிய மாற்றம், கம்ப்ரஷன் (அழுத்தம்) தொழில்நுட்பத்தில் நிகழவுள்ளது. பி.எஸ்5-ல் பயன்படுத்தப்பட்ட Delta Colour Compression-ஐ விடுத்து, சோனி இப்போது Universal Compression என்ற மிக திறமையான முறையை பயன்படுத்த உள்ளது. இந்த தொழில் நுட்பம், ரெண்டரிங் உள்ள அனைத்துத் தரவுகளையும் சுருக்கி, GPU-க்குத் தேவையான அலைவரிசையை (Bandwidth) அதிகளவில் விடுவிக்கும். இதனால், கேம்கள் அதிக செயல்திறனில் இயங்குவதுடன், "அதிக விவரம், அதிக பிரேம் விகிதங்கள் மற்றும் அதிக செயல்திறன்" ஆகியவற்றைச் சாத்தியமாக்கும் என்று AMD-இன் ஜாக் ஹூயின்க் உறுதியளித்துள்ளார். மேலும், AMD-ன் ஏ.ஐ. உதவியுடன் கூடிய FSR Redstone அப்ஸ்கேலிங் தொழில்நுட்பத்தில் Neural Radiance Caching போன்ற புதிய முறைகளும் இந்தக் கட்டமைப்பில் இணைந்து, படத் தெளிவை மெருகூட்டும்.

இந்த மேம்படுத்தப்பட்ட GPU செயல்திறன், வதந்தியாகப் பேசப்படும் புதிய பிளேஸ்டேஷன் ஹேண்ட்கெல்ட் சாதனத்திற்கும் (PlayStation handheld device) பொருத்தமாக இருக்கும் எனத் தெரிகிறது. PS5-இல் உள்ள பவர் சேவர் பயன்முறையை மேலும் திறமையாக்க இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம், சிறிய சாதனங்களில் கூட அதிகபட்ச செயல்திறன் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. சுருக்கமாக, பி.எஸ்.-6 ஆனது விஷுவல் தரத்திலும், செயல்திறன் திறனிலும் மிகப்பெரிய பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது என்பதை சோனியின் இந்த முன்முயற்சி உறுதிப்படுத்துகிறது. அடுத்த தலைமுறை கேமிங் அனுபவம் நிச்சயமாக மிரட்டலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: