ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகரமான பணியை முடித்த பிறகு, 4 நபர்களுடன் சென்ற ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூல் புளோரிடா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை வந்திறங்கியது.
விண்வெளி வீரர்கள் அல்லாத 4 பொது நபர்களுடன் உலகின் முதல் தனியார் விண்வெளி நடைபயணத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் போலரிஸ் டான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 5 நாட்கள் பூமி சுற்றுப் பாதையில் இருந்து திரும்பிய ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூல் மற்றும் முதல் தனியார் விண்வெளி நடைபயணத்தை மேற்கொண்டது.
போலரிஸ் டான் விண்கலத்தில் கோடீஸ்வர தொழிலதிபர் ஜாரெட் ஐசக்மேன், ஓய்வுபெற்ற விமானப்படை லெப்டினன்ட் கர்னல் ஸ்காட் போட்டீட்,மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் பொறியாளர்களான சாரா கில்லிஸ் மற்றும் அன்னா மேனன் ஆகியோர் சென்றிருந்தனர்.
பொதுவாக விண்வெளி நடைபயணம் விண்வெளி வீரர்களால் மேற்கொள்ளப்படும். ஆனால் இங்கு முதல் முறையாக பொது நபர்களுடன் மேற்கொள்ளப்பட்டது.
பணி முடிந்த பின் ஸ்பேஸ் எக்ஸ் போலரிஸ் பதிவில், “SpaceX மற்றும் Polaris Dawn குழுவினர் முதல் வணிக விண்வெளி நடைபயணத்தை முடித்துள்ளனர். டிராகன் வெளியேறும் போது மிஷன் கமாண்டர் ஜாரெட் ஐசக்மேன் ~738 கி.மீ இருந்து நமது கிரகத்தை கண்டார்." என்று கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“