புளோரிடாவில் உள்ள கனாவெரல் விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்பட இருந்த நாசாவின் அடுத்த க்ரூ திட்டமான ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-9 ஏவுதல் மேலும் இரண்டு நாட்கள் தாமதமாகியுள்ளது. டிராகன் விண்கலம் மூலம் நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) 5 மாதங்கள் அனுப்பபட இருந்தனர்.
இந்நிலையில் ஏவுதல் தாமதமாகி உள்ளது. இது நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய இரண்டிற்கும் ஒரு முக்கியமான பணியாகும். ஏனெனில் இது மூத்த விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை விண்வெளி நிலையத்திற்கு இருந்து மீட்டு வர பயன்படுத்தப்பட உள்ளது.
இரண்டு விண்வெளி வீரர்களும் போயிங் ஸ்டார்லைனரில் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றனர். இநநிலையில், விண்கலத்தில் ஏற்பட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் பூமி திரும்ப முடியாமல் சிக்கி உள்ளனர்.
இந்நிலையில், இன்று (வியாழன்) அன்று கனாவெரல் விண்வெளி தளத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-9 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமீபத்திய அப்டேட்படி, ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-9 ராக்கெட் செப்டம்பர் 28 அல்லது 29 அன்று ஏவப்பட உள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-9 மிஷன் மூலம் முதலில் நான்கு விண்வெளி வீரர்களை ஐஎஸ்எஸ்க்கு ஏற்றிச் செல்லவிருந்தது. இருப்பினும், வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் விண்வெளி நிலையத்தில் சிக்கிக் கொண்டதால், விண்வெளி வீரர்களில் இருவர் மட்டுமே தற்போது அனுப்பபட உள்ளது. 2 இடங்கள் வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு காலியாக விடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“