1972க்குப் பின்னர் நிலவுக்கு பயணம் செய்யப் போகும் மனிதன் யார் ?

திங்கள் கிழமை பெரிய அறிவிப்பினைத் தர காத்திருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

ஸ்பேஸ் எக்ஸ், எலோன் மஸ்க், பிக் ஃபால்கன் ஹெவி
ஸ்பேஸ் எக்ஸ்

அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் கார் உற்பத்தி செய்யும் நிறுவனம் டெஸ்லா ஆகும். ஸ்பேஸ் எக்ஸ் என்ற பெயரில் ராக்கெட் உற்பத்தி செய்யும் வேலையில் இருங்கி உள்ளது அந்நிறுவனம். அதிக அளவு எடை கொண்ட காரை விண்ணில் அனுப்பி தன்னுடைய சோதனை ஓட்டத்தை இந்த வருடம் வெற்றிகரமாக முடித்தது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

தற்போது அதே பிக் ஃபால்கான் ராக்கெட் மூலமாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பவது குறித்து ஆராய்ந்து வருகிறது அந்நிறுவனம். அந்த நிறுவனத்தின் தலைவர் எலோன் மாஸ்க் தற்போது நிலவிற்கு மனிதனை அனுப்பவது குறித்து திட்டம் ஒன்றை செயல்படுத்தப் போவதாக கூறியிருக்கிறார்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதல் நிலவு பயணம்

அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ”உலகின் முதல் தனியார் ராக்கெட் சேவையைப் பயன்படுத்தி நிலவிற்கு மனிதனை அனுப்ப உள்ளது ஸ்பேஸ்எக்ஸ் என்றும். அதில் பயணிப்பவரை திங்கள் கிழமை அறிமுகம் செய்து வைக்கின்றேன்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More – To read this article in English

2022க்குள் செவ்வாய் கிரகத்திற்கு பிக் ஃபால்கான் ராக்கெட்டை அனுப்பவது அந்நிறுவனத்தின்  கனவு. இதற்கிடைப்பட்ட காலத்தில் 30 – 40 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

பிக் ஃபால்கான் ராக்கெட் மூலமாக நிலவிற்கு மனிதர்கள் சாதாரணமாக சென்றுவருவதற்கான வாய்ப்புகளும் சாத்தியக் கூறுகளை அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் எலோன் மஸ்க். இதுவரை நிலவிற்கு 24 மனிதர்கள் தான் சென்றுள்ளனர். ஆனால் 1972ற்கு பின்பு நிலவிற்கு மனிதர்கள் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Spacex is sending someone to moon on its rocket

Next Story
ஆப்பிள் ஐபோன் XS, XS மேக்ஸ், ஐபோன் XR: ‘ஐஇதமிழ்’ ஸ்பெஷல் வீடியோApple iPhone XR gets special discount
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com