எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இன்று (புதன்கிழமை) 21 ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்களை குறைந்த புவி சுற்றிப் பாதைக்கு ( low-Earth orbit ) வெற்றிகரமாக ஏவியது. இதில் முதல் முறையாக நிறுவனம் 6 'டைரக்ட்-டு-செல்' (Direct to Cell) ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்களை ஏவியுள்ளது.
இதன் மூலம் பயனர்கள் தங்கள் செல்போன்களில் ஸ்டார்லிங்க் டெர்மினல் இல்லாமல் நேரடியாக மொபைல் நெட்வொர்க்குகளுடன் இணைக்க முடியும். முக்கியமாக Direct-to-Cell Starlink செயற்கைக் கோள்கள் விண்வெளியில் செல்போன் கோபுரங்களாக செயல்படும் மேம்பட்ட மோடம்களைக் கொண்டுள்ளன.
கீழே பூமியில் உள்ள செல்போன் சேவை டெட்ஜோன்களை அகற்ற இது பயன்படுத்தப்படலாம். நெட்வொர்க் வழங்குநர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உலகளாவிய ரோமிங் சேவைகளை வழங்க பல்வேறு நாடுகளில் உள்ள பிற நெட்வொர்க் வழங்குநர்களுடன் எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பதைப் போலவே, அவர்கள் விரைவில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த டைரக்ட் டு செல் சேவையை வழங்க Starlink உடன் கூட்டு சேர முடியும்.
ஸ்பேஸ்எக்ஸின் கூற்றுப்படி, அமெரிக்காவில் டி-மொபைல், கனடாவில் ரோஜர்ஸ், ஜப்பானில் கே.டி.டி.ஐ, ஆஸ்திரேலியாவில் ஆப்டஸ், நியூசிலாந்தில் இருந்து One NZ, சுவிட்சர்லாந்தில் சால்ட் உள்பட பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் டைரக்ட் டு செல்களுக்கான பரஸ்பர அணுகலைப் பெறுவதற்கு, ஏற்கனவே பல வழங்குநர்கள் உள்ளனர் என்று கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“