உலகின் மிகப் பெரிய மற்றும் சக்தி வாய்ந்த ஸ்டார்ஷிப் ராக்கெட் கடந்த சனிக்கிழமை 2-வது சோதனை முயற்சியின் போது மீண்டும் வெடித்து சிதறியது. இந்நிலையில், எலான் மஸ்க் தலைமையிலான தனியார் விண்வெளி நிறுவனம் அடுத்த மாத தொடக்கத்தில் மீண்டும் ஸ்டார்ஷிப் சோதனை செய்யும் எனக் கூறியுள்ளது.
திங்களன்று எலான் மஸ்க் தனது X பக்கத்தில், "ஸ்டார்ஷிப் ஃப்ளைட் 3 ஹார்ட்வேர் இன்னும் 3 முதல் 4 வாரங்களில் ஏவப்படும். ராக்கெட் மற்றும் விண்கலம் டிசம்பர் 20-ம் தேதி ஏவுவதற்கு தொழில்நுட்ப ரீதியாக தயாராக உள்ளது. இருப்பினும் ஏவுதல் உறுதியாக கூற முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் முறையாக ஸ்டார்ஷிப் சோதனையை ஸ்பேஸ் எக்ஸ் மேற்கொண்டது. ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களில் எஞ்சின் மற்றும் தொழில்நுட்ப காரணமாக வெடித்தது. இருப்பினும் அதனுடன் ஒப்பிடுகையில், சனிக்கிழமை ஏவுதல் சற்று வெற்றிகரமாக இருந்தது.
ராக்கெட் ஏவப்பட்டு stage separation வெற்றிகரமாக நடந்தது. மேலும், முதல் ஏவுதலின் போது 33 ராக்கெட் என்ஜின்களில் பல செயலிழந்ததாகத் தெரிந்தாலும், சனிக்கிழமை ஏவப்பட்டபோது ராக்கெட் முழுவதுமாக வெடித்துச் சிதறியது.
அதோடு முதல் சோதனையின் போது ஏவுதளம் தீப்பற்றி முற்றிலும் சேதமடைந்தது. ஆனால் இம்முறை அது சரி செய்யப்பட்டது. தொடர்ந்து, ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. பல திருத்த
நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டது. அதனால் முதல் ஏவலுக்குப் பின் ஏறக்குறைய ஏழு மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது ஏவுதல் நடந்தது.
ஆனால், கடந்த வார ஏவுதல் partial failure ஆகும். இம்முறை 3-வது சோதனைக்கு அவ்வளவு நாட்கள் தேவைப்படாது எனக் கூறப்படுகிறது. இருப்பினும் ஃஎப்.ஏ.ஏ தனது விசாரணையை முடிக்க மற்றும் SpaceX மற்றொரு உரிமத்தை வழங்க எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“