எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ், பூமியின் துருவ சுற்றுப்பாதை ஆய்வுக்கான திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 4 பேர் கொண்ட குழு பூமியின் துருவ சுற்றுப்பாதைக்கு அனுப்படுவர் என்று கூறியுள்ளது.
இந்த திட்டத்திற்கு Fram2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பணி, தனியார் விண்வெளிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும், ஏனெனில் வேறு யாரும் இதற்கு முன் பூமியின் துருவப் பகுதிகளுக்கு சென்றதில்லை.
அந்த 4 பேர் யார்?
இந்த 4 பேர் விண்வெளி வீரர், வீராங்கனைகள் இல்லை. இரண்டு பிட்காயின் நிறுவனங்களை நிறுவிய மால்டாவைச் சேர்ந்த கிரிப்டோகரன்சி தொழிலதிபர் சுன் வாங் Fram2 பணியின் கமாண்டராக இருப்பார்.
அவருடன் ஒரு நார்வே ஒளிப்பதிவாளர் ஜானிக்கே மிக்கெல்சென்; ஜெர்மனியைச் சேர்ந்த ரோபோட்டிக்ஸ் பொறியாளர் ரபேயா ரோஜ் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த துருவ ஆய்வாளர் எரிக் பிலிப்ஸ் ஆகியோர் விண்கலத்தை இயக்கவுள்ளனர்.
பூமியில் இருந்து 425-450 கிலோமீட்டர் மேலே, டிராகன் காப்ஸ்யூலில் இருந்து பூமியின் துருவப் பகுதிகளை இவர்கள் ஆய்வு செய்து திரும்புவது இந்த விண்வெளிப் பயணத்தின் நோக்கமாகும்.
குறிப்பாக, விண்வெளி வீரர்கள் அரோராக்கள், Northern lights (Aurora borealis) and Southern lights (Aurora australis) போன்ற வானியல் நிகழ்வுகளையும் கண்டு ஆய்வு செய்வார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“