/indian-express-tamil/media/media_files/2025/10/04/samsung-galaxy-f07-2025-10-04-15-32-40.jpg)
ரூ.6,999 முதல்... சாம்சங் கேலக்சி ஏ7, எஃப்07, எம்07 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்!
சாம்சங் நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி A07, Galaxy F07, மற்றும் Galaxy M07 ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த 3 மாடல்களும் ஒரே மாதிரியான ஃபீச்சர்ஸ் (Features), ஸ்பெசிஃபிகேஷன்களை (Specifications) கொண்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விற்பனைத் தளங்கள் மூலம், வெவ்வேறு நிறத் தேர்வுகளிலும் விலையிலும் விற்கப்படுகின்றன.
மாடல் | விலை (ரூபாயில்) | நிறங்கள் (Colourways) | விற்பனைத் தளம் |
Galaxy M07 | 6,999 | கருப்பு (Black) | அமேசான் (Amazon Exclusive) |
Galaxy F07 | 7,699 | பச்சை (Green) | ஃபிளிப்கார்ட் (Flipkart) |
Galaxy A07 | 8,999 | கருப்பு, பச்சை, ஊதா (Light Violet) | சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் |
இந்த 3 மாடல்களும் 4GB ரேம்+64GB உள்ளடக்க ஸ்டோரேஜில் (Storage) மட்டுமே கிடைக்கின்றன.
அம்சம் | விவரக்குறிப்பு |
டிஸ்பிளே (Display) | 6.7-இன்ச் HD+ (720 x 1,600p) PLS எல்.சி.டி. டிஸ்பிளே, 90Hz புதுப்பிப்பு வீதம் |
செயலி (Processor) | ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் |
ஸ்டோரேஜ் (Storage) | 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் (மைக்ரோ SD கார்டு மூலம் 2TB வரை விரிவாக்கம் செய்யலாம்) |
பின் கேமரா | 50 mp மெயின் கேமரா (f/1.8) + 2-mp டெப்த் சென்சார் |
முன் கேமரா | 8 mp (செல்ஃபி மற்றும் வீடியோ கால்ஸ்-க்கு ஏற்றது) |
பேட்டரி | 5,000mAh பேட்டரி (25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு) |
இயங்குதளம் (OS) | ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான One UI 7 |
அப்டேட் | 6 முக்கிய OS அப்டேட், 6 ஆண்டுகள் பாதுகாப்பு அப்டேட் |
பாதுகாப்பு | ஐபி54-தர நிர்ணய சான்று (தூசி மற்றும் நீர் நுழைவுக்கு எதிராக) |
வடிவமைப்பு | 167.4 x 77.4 x 7.6mm பரிமாணங்கள், 184g எடை |
இணைப்பு வசதிகள் (Connectivity): 4G LTE, புளூடூத் 5.3, Wi-Fi 5, Wi-Fi Direct, GPS, 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை இதில் அடங்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.