ஆதார் கார்டு மிக முக்கிய அடையாள அட்டை ஆகும். இந்திய குடிமக்கள் ஆதார் கார்டு வைத்திருப்பது கட்டாயம் ஆகும். அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஷாப்பிங் முதல் வங்கி பரிவர்த்தனை வரை அனைத்திற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆதாரில் உங்கள் சுயவிவரங்கள் இடம்பெற்றிருக்கும். அந்தவகையில் ஆதாரில் பெயர் மாற்றம். திருத்தம் செய்ய வேண்டும் என்றால் ஆன்லைனில் எளிதாக செய்யலாம். ஸ்டெப் பை ஸ்டெப் பிராசஸ் குறித்து இங்கு பார்ப்போம்.
Step 1: ஆதாருக்கென பிரத்தியேக பிரிவான UIDAI-யின் Self Service Update Portal (SSUP) பக்கத்திற்கு செல்ல வேண்டும். https://ssup.uidai.gov.in/ssup/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
Step 2: இப்போது ‘login’ கிளிக் செய்து 12 இலக்க ஆதார் எண்ணைப் பதிவிட்டு captcha code-டை பதிவிடவும். பின்னர் ‘Send OTP’ என்பதைக் கிளிக் செய்து, உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP-யை பதிவிடவும்.
Step 3: அடுத்து மீண்டும் லாக்கின் கொடுத்து services பக்கத்தில் உள்ள ‘Update Aadhaar Online’ கொடுக்கவும்.
Step 4: பின்னர் ‘Proceed to Update Aadhaar’ எனக் கொடுத்து பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 5: உங்கள் ஆதாரில் உள்ள பெயர் ஸ்கீரினில் காட்டப்படும். தேவையான விவரங்கள், ஆவணங்களை சமர்ப்பித்து பெயரை மாற்றவும்.
Step 6: அடுத்து confirm the changes கொடுத்து proceed கொடுக்க வேண்டும். பின்னர் சேவை கட்டணமாக ரூ.50 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
அவ்வளவு தான், உங்கள் எண்ணுக்கு Update Request Number (URN) அனுப்பி வைக்கப்படும். இதைப் பயன்படுத்தி உங்கள் அப்டேட் ஸ்டேட்டஸ் செக் செய்து கொள்ளலாம். SSUP portal சென்று URN கொடுத்து செக் செய்து கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/