/indian-express-tamil/media/media_files/2025/09/25/acer-new-mobile-hotspot-2025-09-25-15-05-45.jpg)
பவர் பேங்க் + 5ஜி வைஃபை ஹாட்ஸ்பாட்... டூ-இன்-ஒன் ஏசர் கனெக்ட் எம்-4 பவர்ஹவுஸ்!
நீங்க அடிக்கடிப் பயணம் செய்பவராக இருந்தாலும் சரி அல்லது உலகின் எந்த மூலையில் இருந்தும் வேலை செய்யும் டிஜிட்டல் நாடோடியாக இருந்தாலும் சரி, ஏசர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கனெக்ட் எம்-4 சாதனமானது, பயணத்தின் போது உங்களுக்குத் தேவையான வேகமான இணைய இணைப்பைக் கொண்டு வரப்போகிறது. 5ஜி வேகம், Wi-Fi 6 டூயல்-பேண்ட் ஆதரவு, ட்ரை-சிம் (Tri-SIM) எனப் பல நவீன அம்சங்களை இது கொண்டுள்ளது.
இந்த டிவைஸின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இது சர்வதேசப் பயணிகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்க வெளிநாட்டிற்குப் பயணிக்கும்போது, விமானத்தில் இருந்து இறங்கிய உடனேயே, Manual Setup எதுவுமின்றி, சிம் கார்டை மாற்ற வேண்டிய அவசியமின்றி, இது தானாகவே உள்ளூர் மொபைல் சேவை வழங்குநர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும்.
ரோமிங் தொல்லைகள் இல்லாமல், 135-க்கும் மேற்பட்ட நாடுகளில் எந்தவொரு தடங்கலும் இன்றி நெட் யன்படுத்த முடியும். Nano SIM, eSIM மற்றும் vSIM ஆகிய 3 சிம் வகைகளுக்கும் இது ஆதரவளிக்கிறது. மேலும், SIMO SignalScan தொழில்நுட்பம் இருப்பதால், தானாகவே வலுவான நெட்வொர்க்கைக் கண்டறிந்து அதனுடன் இணைந்துகொள்ளும்.
இந்தச் சிறிய சாதனம் பவர் ஹவுஸைப் போலவே செயல்படுகிறது. ஒரே நேரத்தில் 16 டிவைஸ் வரை இணைக்கும் திறனை இது கொண்டுள்ளது. உங்க அருகிலுள்ள எந்தச் சூழலையும் இது அதிவேக Wi-Fi மண்டலமாக மாற்றும். இதில் உள்ள 8,000 mAh பேட்டரி, 28 மணி நேரம் வரை தொடர்ந்து பயன்படுத்தும் திறனைக் கொண்டது. இதுமட்டுமல்லாமல், இது பவர் பேங்க்காகவும் செயல்பட முடியும். இதன் USB-C ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட் வழியாக மற்ற சாதனங்களுக்கு சார்ஜ் செய்யலாம்.
300 கிராமுக்குக் குறைவான எடையுடன், இதை உங்க பாக்கெட்டில் அல்லது சிறிய பைகளில் எளிதாக வைத்துக்கொள்ளலாம். மேலும், ஐபி68 தரச் சான்றிதழ் பெற்றிருப்பதால், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிலும் பாதுகாக்கிறது. MediaTek ஆக்டா-கோர் செயலி, 3GB ரேம்+8 GB சேமிப்பகம் இதன் மையத்தில் உள்ளது. இது 6 மாதங்களுக்குச் செல்லுபடியாகும் 20GB டேட்டா பேக்குடன் வருகிறது. இதன் விலை ரூ.19,999. நீங்க உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், இணைய இணைப்பு உங்கள் கையில் இருக்க வேண்டும் என்று நினைத்தால், இந்த ஏசர் கனெக்ட் எம்-4 மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.