யூடியூப் சார்ட்ஸ்-ல் புதிய 'டைமர்' அம்சம் அறிமுகம்: ஸ்க்ரோலிங்கைத் தடுக்கும் ஆட்டோமேட்டிக் பாஸ் வசதி!

யூடியூப் நிறுவனம், பயனர்கள் சார்ட்ஸ் வீடியோக்களைப் பார்ப்பதற்குச் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்த உதவும் வகையில், புதிய ‘Shorts Timer’ அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் தினசரி நேர வரம்பை நிர்ணயிக்க முடியும்.

யூடியூப் நிறுவனம், பயனர்கள் சார்ட்ஸ் வீடியோக்களைப் பார்ப்பதற்குச் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்த உதவும் வகையில், புதிய ‘Shorts Timer’ அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் தினசரி நேர வரம்பை நிர்ணயிக்க முடியும்.

author-image
WebDesk
New Update
youtube Shorts Timer

யூடியூப் சார்ட்ஸ்-ல் புதிய 'டைமர்' அம்சம் அறிமுகம்: ஸ்க்ரோலிங்கைத் தடுக்கும் ஆட்டோமேட்டிக் பாஸ் வசதி!

யூடியூப் சார்ட்ஸ் (Shorts) வீடியோவை ஸ்க்ரோல் செய்ய ஆரம்பித்தால், மணிநேரம் போவதே தெரியவில்லையா? முக்கிய வேலையை மறந்து, திரும்பதிரும்ப சார்ட்ஸ் பார்த்து நேரத்தை கடத்துகிறீர்களா? உங்களுக்காகவே ஒரு அதிரடி தீர்வை யூடியூப் கொண்டு வந்துள்ளது. பயனர்களை அடிமையாக்கும் சார்ட்ஸ் வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, புதிய ‘Shorts Timer’ அம்சத்தை யூடியூப் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இனி நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் சார்ட்ஸ் பார்க்கலாம் என்பதை நீங்களே நிர்ணயிக்கலாம்.

Advertisment

எப்படி வேலை செய்கிறது இந்த மேஜிக்?

சிம்பிள். நீங்க ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் என லிமிட் வைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த 30 நிமிடங்கள் முடிந்தவுடன், ஆஃப் தானாகவே சார்ட்ஸ்-ஐ 'பாஸ்' (Pause) செய்து நிறுத்திவிடும். பிறகு ஸ்கிரீனில் "இன்றையக்கான நேர லிமிட் எட்டிவிட்டீர்கள். போதும், நிறுத்துங்க" என்ற மெசேஜ் பளிச்சென்று தோன்றும். இதுபோல உறுதியான லிமிட் இல்லாததால், பழைய நினைவூட்டல்களை நாம் எளிதில் தவிர்த்துவிட்டு, மீண்டும் ஸ்க்ரோல் செய்ய ஆரம்பித்தோம். ஆனால், இந்த டைமர் அப்படி அல்ல. நீங்க செட்டிங் மாற்றும் வரை, அன்றைய நாள் முடிந்தது.

15, 30 நிமிடங்களுக்கு ஒருமுறை "ஓய்வு எடுங்கள்" (Take a Break) அல்லது "தூங்கச் செல்லுங்கள்" (Bedtime Reminder) போன்ற நினைவூட்டல்களை யூடியூப் ஏற்கனவே கொடுத்தது. ஆனால், அதை நாம் ஒருநொடியில் 'Dismiss' செய்துவிட்டு பார்க்கத் தொடங்கிவிடுவோம். ஆனால், இந்த சார்ட்ஸ் டைமரின் சிறப்பு என்னவென்றால், இது உறுதியானது (Fimer Limit). இது சாதாரண நினைவூட்டல் அல்ல, நேரத்தை முடித்ததும் சார்ட்ஸ்-ஐ நிறுத்தி, நீங்க அடுத்த வீடியோவுக்குப் போக விடாமல் தடுத்துவிடும். இதுதான் பயனர்கள் மீது நேரடிக் கட்டுப்பாட்டைக் கொடுக்கிறது.

தற்போது இந்த டைமர், அதை செட் செய்யும் பயனருக்கு மட்டுமே வேலை செய்யும். ஆனால், இந்த ஆண்டின் பிற்பகுதியில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சார்ட்ஸ் பார்ப்பதற்கான நேர வரம்புகளை நிர்ணயிக்கும் வசதியையும் (Parental Control Integration) இணைக்க யூடியூப் திட்டமிட்டுள்ளது. அப்போது, குழந்தைகள் இந்த 'பாஸ்' நோட்டிஃபிகேஷனைத் தவிர்க்கவே முடியாது. இதனால், பெற்றோர்கள் நிம்மதியாக தங்கள் குழந்தைகளின் டிஜிட்டல் நேரத்தை நிர்வகிக்கலாம்.

Advertisment
Advertisements

பயனர்கள் எப்படி டைமரை செட் செய்வது?

யூடியூப் ஆஃப்பை திறந்து, ப்ரொஃபைல் ஐகானுக்குச் செல்லவும். Settings -> General -> Remind me to take a break-ஐ ஆன் செய்து நேரத்தை செட் செய்யலாம். இதே வழியில், விரைவில் Shorts Timer ஆப்ஷனும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: