வானில் இன்று நடக்கும் அதிசயம்... 'ஸ்ட்ராபெரி மூன்' பார்க்க ரெடியா!

இந்த ஆண்டின் 'ஸ்ட்ராபெரி மூன்' இன்றிரவு தோன்றும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மற்ற முழு நிலவை விட, இது மிகவும் வித்தியாசமானது என்றும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த ஆண்டின் 'ஸ்ட்ராபெரி மூன்' இன்றிரவு தோன்றும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மற்ற முழு நிலவை விட, இது மிகவும் வித்தியாசமானது என்றும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Strawberry Moon 2025

இன்று வானில் நடக்கும் அதிசயம்... 'ஸ்ட்ராபெரி மூன்' பார்க்க ரெடியா!

Strawberry Moon 2025 India Date, Time: இந்த ஆண்டின் 'ஸ்ட்ராபெரி மூன்' இன்று தோன்றும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மற்ற முழு நிலவை விட, இது மிகவும் வித்தியாசமானது என்றும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இது கோடைகால சங்கிராந்திக்கு முன் தோன்றும் கடைசி முழு நிலவாகும் மேலும் இது வசந்த காலத்தின் முடிவையும் குறிக்கிறது.

Advertisment

ஸ்ட்ராபெரி மூன் (Strawberry Moon) என்றால் என்ன?

ஸ்ட்ராபெரி மூன் என்பது நீங்கள் நினைப்பது போல் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் தோன்றும் நிலவு அல்ல. "ஸ்ட்ராபெரி மூன்" என்ற சொல் வட அமெரிக்காவின் அல்கோன்கியன் (Algonquin) பழங்குடியினரிடமிருந்து வந்தது. அவர்கள் முழு நிலவை, தங்கள் ஸ்ட்ராபெரி பழங்கள் அறுவடைக்குத் தயாராக இருப்பதற்கான அறிகுறியாகக் கருதினர்.

சில அமெரிக்கப் பழங்குடியினர் இதை "பெர்ரி பழங்கள் பழுக்கும் நிலவு" (Berries Ripen Moon) மற்றும் "பச்சை சோள நிலவு" (Green Corn Moon) என்றழைக்கின்றனர். "பூக்கும் நிலவு" (Blooming Moon) மற்றும் "வெப்ப நிலவு" (Hot Moon) என்பன இதன் மற்ற பெயர்களாகும். இதன் சில ஆங்கிலப் பெயர்களில் "மலர் நிலவு" (Flower Moon), "நடவு நிலவு" (Planting Moon) மற்றும் "மீட் நிலவு" (Mead Moon) ஆகியவை அடங்கும். அதேசமயம், செல்டிக் (Celtic) மக்கள் இதை "குதிரை நிலவு" (Horse Moon), "டயான் நிலவு" (Dyan Moon) மற்றும் "ரோஜா நிலவு" (Rose Moon) என்று பெயரிட்டுள்ளனர்.

Advertisment
Advertisements

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

ஸ்ட்ராபெரி மூன், மாறும் பருவங்களையும் பண்டைய மரபுகளையும் நினைவூட்டுவதாக அமைகிறது. "ஒரு காலத்தில் இயற்கையும் வானமும் பூமிக்குக் கீழ் உள்ள வாழ்க்கையை எவ்வாறு வழிநடத்தின என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு" என்று நாசா (NASA) கூறுகிறது. தற்போது சந்திரன் பூமிக்கு மிகத் தொலைவில் உள்ள புள்ளியில் இருப்பதால், இது ஒரு "ஸ்ட்ராபெரி மைக்ரோ மூன்" (Strawberry Micro Moon) ஆகத் தோன்றும்.

ஸ்ட்ராபெரி மூன் எப்போது தோன்றும்?

முழு ஸ்ட்ராபெரி மூன், புதன்கிழமை அன்று கிழக்கு நேரப்படி (E.T) அதிகாலை 3:44 மணிக்கு அல்லது இந்திய நேரப்படி (IST) மதியம் 1:14 மணிக்கு அதன் உச்சத்தை அடையும். இந்த முறை ஸ்ட்ராபெரி நிலவு மிக சிறப்பு வாய்ந்தது. இதற்குக் காரணம் "மேஜர் லூனார் ஸ்டான்ட்ஸ்டில்" (major lunar standstill) எனப்படும் ஒரு அரிய நிகழ்வாகும். இது ஒவ்வொரு 18.6 வருடங்களுக்கும் ஒருமுறை நிகழ்கிறது.

இந்த நிகழ்வின்போது, சந்திரன் வானத்தில் ஒரு தாழ்வான பாதையில் பயணிக்கும். இதன் காரணமாக, அது தங்கம் அல்லது செம்பழுப்பு (amber) நிறத்தில் தோன்றக்கூடும். ஒளிச்சிதறல் (scattering effect) காரணமாக நிலவு இந்த வெப்பமான நிறங்களில் காட்சியளிக்கும். மேலும், சில பகுதிகளில் ஸ்ட்ராபெரி மூன் சிவப்பு நிறத்திலும் தோன்றக்கூடும். இதற்குக் காரணம், ஒளியின் குறுகிய அலைநீளங்கள் சிதறடிக்கப்பட்டு, சிவப்பு போன்ற நீண்ட அலைநீளங்கள் கொண்ட ஒளி மட்டும் பார்வையாளர்களின் கண்களை வந்தடைவதே ஆகும்.

இந்தியாவில் ஸ்ட்ராபெரி மூனைப் பார்ப்பது எப்படி?

நீங்கள் இந்தியாவில் வசிப்பவராக இருந்தால், இந்த நிகழ்வைக் காண்பதற்கான சிறந்த நேரம் இன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, மாலை 7:15 மணி முதல் 8:00 மணி வரை ஆகும். light pollution குறைவாகவும், வானம் தெளிவாகவும் இருக்கும் இடத்திலிருந்து இந்த நிகழ்வை மிகச் சிறப்பாகக் காணலாம்.

இந்த அரிய நிகழ்வு, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புனே, சென்னை, அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற முக்கிய நகரங்களிலும் தெரியும். இதுபோன்ற ஒரு நிலவு மீண்டும் 2043 ஆம் ஆண்டு வரை தோன்றும் என எதிர்பார்க்கப்படாததால், இது ஒரு தலைமுறைக்கு ஒருமுறை காணக்கூடிய நிகழ்வாக அமைகிறது.

moon

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: