வைஃபை கனெக்‌ஷன், ஸ்பீடு பிரச்னையா?... இந்த பொருட்களை ரவுட்டரிலிருந்து தூரமாக வைங்க!

வீட்டில் வைஃபை பயன்படுத்தும்போது, வீடியோக்கள் இடையிடையே நின்றுபோவது, வெப் பேஜ் மெதுவாகத் திறப்பது போன்ற பிரச்னைகளைச் சந்திக்கிறீர்களா? இதற்கு உங்கள் வீட்டில் உள்ள சில அன்றாடப் பொருட்களே காரணமாக இருக்கலாம்.

வீட்டில் வைஃபை பயன்படுத்தும்போது, வீடியோக்கள் இடையிடையே நின்றுபோவது, வெப் பேஜ் மெதுவாகத் திறப்பது போன்ற பிரச்னைகளைச் சந்திக்கிறீர்களா? இதற்கு உங்கள் வீட்டில் உள்ள சில அன்றாடப் பொருட்களே காரணமாக இருக்கலாம்.

author-image
WebDesk
New Update
poor Wi-Fi signal

வைஃபை கனெக்‌ஷன், ஸ்பீடு பிரச்னையா?... இந்த பொருட்களை ரவுட்டரிலிருந்து தூரமாக வையுங்கள்!

வீட்டில் வைஃபை பயன்படுத்தும்போது, வீடியோக்கள் இடையிடையே நின்றுபோவது, வெப் பேஜ் மெதுவாகத் திறப்பது போன்ற பிரச்னைகளைச் சந்திக்கிறீர்களா? இதற்கு உங்கள் வீட்டில் உள்ள சில அன்றாடப் பொருட்களே காரணமாக இருக்கலாம். வைஃபை சிக்னல்களைச் சுவர்கள் (அ) கதவுகள் தடுப்பது அறிந்ததே. ஆனால், வேறு சில பொருட்களும் உங்கள் வைஃபை இணைப்பை குறைக்கும் (அ) துண்டிக்கும் வாய்ப்புள்ளது.

கண்ணாடி மற்றும் உலோகப் பொருட்கள்

Advertisment

வைஃபை ரவுட்டர் (router) பெரிய கண்ணாடிக்கு அருகில் இருந்தால், அதன் எதிரொலிக்கும் தன்மையால் சிக்னல்கள் திரும்பிச் சென்று, அதன் வரம்பைக் குறைக்கும். அதேபோல், உலோகம் (metal) வைஃபை சிக்னல்களைத் தடுக்கும் பொதுவான பொருட்களில் ஒன்றாகும். உலோகம் மின்சாரத்தை கடத்தும் சிறந்த பொருளாக இருந்தாலும், அது மின்காந்த அலைகளை (electromagnetic waves) எதிரொலிப்பதால், வைஃபை சிக்னல் அதன் வழியாகச் செல்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

ப்ளூடூத் (Bluetooth) சாதனங்கள்

நம்மில் பலர் ரவுட்டரை கணினிக்கு அருகிலும், ஸ்பீக்கர்கள், கீபோர்டுகள், மவுஸ் போன்ற ப்ளூடூத் சாதனங்களுக்கு அருகிலும் வைப்போம். வைஃபை, ப்ளூடூத் ஆகிய இரண்டும் பெரும்பாலும் ஒரே அலைவரிசைப் பட்டையில் (frequency band) இயங்குவதால், அவை ஒன்றுக்கொன்று மிக அருகில் இருந்தால், ரவுட்டரின் சிக்னலில் குறுக்கிடலாம்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

உங்கள் வைஃபை சிக்னல் வலிமையில் சிக்கல் இருந்தால், குறிப்பாக 2.4GHz அலைவரிசையில் இயங்கும் ரவுட்டரை வைத்திருந்தால், அதை மற்ற சாதனங்களிலிருந்து சற்று நகர்த்தி வைக்க முயற்சி செய்யலாம். உங்கள் ரவுட்டர் 5GHz அலைவரிசையை ஆதரித்தால், அதற்கு மாறுவது இந்தச் சிக்கல்களைக் குறைக்கும்.

மர மற்றும் உலோக மரச்சாமான்கள்

Advertisment
Advertisements

உலோகப் பொருட்கள் வைஃபை சிக்னல்களைத் தடுக்கும். அதேபோல், சில பெரிய மரப் பொருட்களும் இணைய வேகத்தைக் குறைக்கலாம். உங்கள் ரவுட்டர் மூடிய இடத்தில் (அ) மர அலமாரியில் வைக்கப்பட்டிருந்தால், அதை வெளியே எடுத்து வைக்கலாம் அல்லது அன்டெனாக்களை (antennas) மாற்றி அமைப்பதன் மூலம் இணைப்பை மேம்படுத்த முடியும்.

மைக்ரோவேவ் ஓவன்கள்

மைக்ரோவேவ் ஓவன்கள் சிக்னல்களைத் துண்டிப்பதில் பிரபலமானவை. ஏனெனில், அவை இயங்கும்போது சிறிய அளவிலான கதிர்வீச்சை வெளியிடுகின்றன. பெரும்பாலான மைக்ரோவேவ் ஓவன்கள் 2.4GHz அலைவரிசையில் இயங்குவதால், ரவுட்டர் சமையலறையில் அதற்கு அருகில் இருந்தால், அதை நகர்த்தி வைப்பதன் மூலம் சிக்னல் வரம்பை கணிசமாக அதிகரிக்க முடியும்.

மீன் தொட்டிகள் (அ) தண்ணீர் தொட்டிகள்

கேட்க ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் நீரின் மூலக்கூறுகள் ரேடியோ அலைகளால் வெளியிடப்படும் ஆற்றலை எளிதாக உறிஞ்சும் திறன் கொண்டவை. எனவே, உங்கள் ரவுட்டர் ஒரு பெரிய மீன் தொட்டி அல்லது தண்ணீர் தொட்டிக்கு அருகில் இருந்தால், வீட்டின் மற்ற பகுதிகளில் சிக்னல் கிடைக்காமல் இருப்பதற்கு அதுவே காரணமாக இருக்கலாம். அதேபோல், அதிக மழை பெய்யும் இடங்களில், மழைத்துளிகள் சிக்னலை உறிஞ்சுவதால் வைஃபை வரம்பு குறைய வாய்ப்புள்ளது.

உங்கள் வைஃபை வேகம் குறைவதற்கு உங்கள் அண்டை வீட்டாரின் ரவுட்டரும் காரணமாக இருக்கலாம். பெரும்பாலும், அனைத்து ரவுட்டர்களும் ஒரே அலைவரிசை வரம்பில் இயங்குகின்றன. அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தால், உங்கள் அண்டை வீட்டாரின் வைஃபை உங்கள் நெட்வொர்க் உடன் ஒரே சேனலில் இயங்கி, உங்கள் இணைய வேகத்தைக் குறைக்கலாம். இதற்குத் தீர்வாக, கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கும் சில செயலிகளைப் பயன்படுத்தி, எந்தெந்த வைஃபை நெட்வொர்க்குகள் ஒரே சேனலில் இயங்குகின்றன என்பதைக் கண்டறியலாம். பின்னர், உங்கள் ரவுட்டரின் செட்டிங்ஸ் பக்கத்திற்குச் சென்று, குறைவான நெரிசல் உள்ள சேனலுக்கு மாறலாம். இந்த பொதுவான பொருட்களை எல்லாம் நகர்த்தி வைத்த பிறகும் வைஃபை வேகம் குறைவாக இருந்தால், வேறு சில காரணங்கள் இருக்கலாம். அவற்றை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: