Advertisment

Sun Direct New Tarrif: அதே கட்டணத்திற்கு அதிக சேனல்களை வழங்கும் சன் டைரக்ட்!

Sun Direct Plans Details: அனைத்து வரிகளையும் சேர்த்து மாதாந்திர என்.சி.எஃப் இறுதி தொகை ரூ .153 ஆகும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sun Direct DTH offering more channels for same price

Sun Direct DTH

Sun Direct Plans and Channels: பிரபலமான டி.டி.எச் ஆபரேட்டரான ’சன் டைரக்ட்’ அதன் போட்டியாளர்களான ’டாடா ஸ்கை’ மற்றும் ’ஏர்டெல் டிஜிட்டல் டி.வி’ ஆகியோர்கள் அதிர்ச்சியாகும் வகையில் தனது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisment

அதாவது ஒவ்வொரு முதன்மை இணைப்பிலும் பொதுவாக வசூலிக்கப்படும் ரூ 130-க்கு (நெட்வொர்க் கெபாசிட்டி ஃபீஸ், என்.சி.எஃப்) 155 சேனல்களைப் பார்த்துக் கொள்ளலாம், என சன் டைரக்ட் அறிவித்துள்ளது. இதற்கு முன் சன் டைரக்ட் வழங்கிய 100 சேனல்களை விட 55 சேனல்கள் அதிகரித்துள்ளதுன் இதன் மூலம் உறுதியாகிறது. அனைத்து வரிகளையும் சேர்த்து மாதாந்திர என்.சி.எஃப் இறுதி தொகை ரூ .153 ஆகும்.

ஆகஸ்ட் 20-ம் தேதி வெளிவந்த அறிவிப்பின்படி, ஒவ்வொரு ஹெ.டி சேனலும் எஸ்.டி சேனலை விட இரண்டு மடங்கு அதிக கிளாரிட்டியாக இருக்கும் என்று சன் டைரக்ட் தெரிவித்திருந்தது. இதன் மூலம் ஒரு சந்தாதாரர் 155 எஸ்.டி சேனல்கள் அல்லது 77 ஹெச்.டி சேனல்களை ரூ 153 என்.சி.எஃப்-ல் பெறலாம். ஒவ்வொரு கூடுதல் 25 எஸ்.டி சேனல்களுக்கும் என்.சி.எஃப் ரூ 20 அதிகரிக்கும்.

மற்ற முன்னணி டி.டி.ஹெச் ஆபரேட்டர்களான ’டாடா ஸ்கை’ மற்றும் ’ஏர்டெல் டிஜிட்டல் டிவி’ ஆகியவை ரூ 153 க்கு 100 எஸ்.டி. சேனல்களை வழங்குகின்றன. இந்த செய்தியின் மூலம் அதே என்.சி.எஃப்-க்கு சேனல்களை அவைகளும் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sun Tv Airtel Tata
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment