நாசாவின் புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனையான சுனிதா எல். வில்லியம்ஸ், போயிங்கின் ஸ்டார்லைனர் திட்டத்தில் பைலட்டாக இடம் பெற உள்ளார். நாசாவின் போயிங்கின் ஸ்டார்லைனர் திட்டத்தில் க்ரூ ஃப்ளைட் டெஸ்ட் மிஷனின் பைலட்டாக பயிற்சி பெற்று வருகிறார். இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சுனிதா வில்லியம்ஸ் செல்வது 3-வது முறையாகும்.
அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா கூறுகையில், இந்த மிஷனை மே 6 திங்கட்கிழமை EDT நேரப்படி இரவு 10:34 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஸ்பேஸ் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் உள்ள விண்வெளி ஏவுதள வளாகம்-41ல் இருந்து ராக்கெட் ஏவப்படும்.
நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் V ராக்கெட் மூலம் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏறிச் சென்று, சுற்றுப் பாதையில் செல்லும் ஆய்வகத்திற்கு செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் ஒரு வாரகாலம் தங்கி ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்லைனர் விண்கலத்தின் முதல் க்ரூ திட்டம் இதுவாகும். விண்வெளித் துறையில்
சுனிதா வில்லியம்ஸ் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். விண்வெளியில் வெற்றிகரமாக ஸ்பேஸ் வாக் செய்துள்ளார். ஏற்கனவே 2 முறை சர்வதேச விண்வெளி நிலையம் சென்று ஆய்வு செய்த அனுபவம் கொண்டவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“