Advertisment

சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் அடுத்த ஆண்டு விண்வெளியில் இருந்து திரும்புவார்கள்: நாசா

ஸ்டார்லைனரின் புரொபல்ஸன் அமைப்பில் (propulsion system) உள்ள சிக்கல்கள் அதன் முதல் குழுவினரை பூமிக்கு அழைத்து வருவதில் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும், என்று நிறுவனம் தீர்மானித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Sunita Williams and Barry Wilmore

Sunita Williams and Barry Wilmore

ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலனில் பயணம் செய்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா சனிக்கிழமை அறிவித்தது.

Advertisment

ஸ்டார்லைனரின் புரொபல்ஸன் அமைப்பில் (propulsion system) உள்ள சிக்கல்கள் அதன் முதல் குழுவினரை பூமிக்கு அழைத்து வருவதில் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும், என்று நிறுவனம் தீர்மானித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அடுத்த பிப்ரவரியில் (SpaceX’s) க்ரூ-9 உடன் புட்ச் மற்றும் சுனிதா திரும்புவார்கள், போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலனை யாருமின்றி (Uncrewed) பூமிக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளோம், என்று நாசாவின் அட்மினிஸ்ட்ரேட்டர் பில் நெல்சன் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

இந்த முடிவை எடுப்பதற்கு தேவையான தரவுகளைப் பெற நாசாவுடன் போயிங் மிகவும் கடினமாக உழைத்துள்ளது என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன். நாங்கள் மூல காரணங்களை மேலும் புரிந்து கொள்ள விரும்புகிறோம், மேலும் வடிவமைப்பு மேம்பாடுகளைப் புரிந்துகொள்வதன் மூலம் போயிங் ஸ்டார்லைனர், சர்வதேச விண்வெளி மையத்துக்கான எங்கள் உறுதியான குழு அணுகலில் ஒரு முக்கிய பகுதியாக செயல்படும்.

விண்வெளிப் பயணம் ஆபத்தானது, அது பாதுகாப்பான விண்கலனாக இருந்தாலும் ஆபத்து என்பது உள்ளது. அதுவும் சோதனை அடிப்படையிலான பயணம் பாதுகாப்பானது அல்ல. அதனால் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்க வைப்பது மற்றும் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலனை யாருமின்றி (Uncrewed) பூமிக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளோம். அதுதான் பாதுகாப்பான வழியாக இருக்கும்’, என்று அவர் மேலும் கூறினார்.

சுனிதா மற்றும் வில்மோர் ஆகிய இரு அனுபவமிக்க விண்வெளி வீரர்களும், போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலமான ஸ்டார்லைனரை சோதிக்க, ஜூன் 6 அன்று சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். ஆரம்பத்தில் இது ஒரு குறுகிய மிஷனாக திட்டமிடப்பட்டது.

ஆனால், விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இப்போதுவரை அவர்களால் திரும்பி வர முடியவில்லை.

Read in English: Starliner astronauts Sunita Williams and Barry Wilmore to return from Space next year: NASA

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Nasa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment