ஜூன் மாதம் போயிங்கின் புதிய ஸ்டார்லைனரில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் சோதனை பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். போயிங்கின் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்போது பூமி திரும்ப முடியாமல் உள்ளனர்.
8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற அவர்கள் தற்போது பூமி திரும்ப முடியாமல் உள்ளனர். ஆளில்லா விண்கலமாக போயிங்கின் விண்கலம் இன்று பூமி திரும்புகிறது. வில்லியம்ஸ் மற்றும் புட்ச் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ விண்கலம் மூலம் பூமி திரும்புவர் என நாசா அறிவித்துள்ளது.
இந்நிலையில், விண்வெளி வீரர்கள் இப்போது SpaceX-ன் க்ரூ டிராகனை அவசர வாகனமாக நம்பியிருப்பார்கள், அதுதான் திட்டம். இருப்பினும், நாசாவின் வணிகக் குழு மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச், ஸ்டார்லைனர் சூட்கள் க்ரூ டிராகனுடன் பொருந்தவில்லை என்பதை வெளிப்படுத்தினார்.
சர்வதே விண்வெளி நிலையத்தில் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நாசா ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தை நிறுத்தியுள்ளது. அவசரகால வெளியேற்றத்திற்காக நாசா ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைந்து சமீபத்தில் க்ரூ-8 திட்டத்தை செயல்படுத்தி விண்கலத்தை அனுப்பியது.
ஸ்டீவ் ஸ்டிச் கூறுகையில், சுனிதா, வில்மோர் அணிந்திருக்கும் உடைகள் SpaceX-ன் க்ரூ டிராகன் விண்கலத்துடன் "பொருந்தவில்லை". என்றார்.
பெரிய நிறுவனங்களான போயிங்கின் ஸ்டார்லைனர் மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய இரண்டும் அமெரிக்க விண்வெளி வீரர்களை ISS க்கு அழைத்துச் செல்லும் பொறுப்பில் உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் அவற்றின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு அதன் தனித்துவமான விண்கலம் மற்றும் அதற்கு ஏற்றார் போல் ஸ்பேஸ்சூட் வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன.
சுனிதா, வில்மோர் அடுத்தாண்டு ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ-9 திட்டத்தில் பூமிக்கு அழைத்து வர நாசா திட்டமிட்டுள்ளது. க்ரூ-9 விண்கலத்தை அனுப்பும் போது தான் அப்போது தான் ஸ்போஸ் சூட் அனுப்ப முடியும் என ஸ்டீவ் கூறினார். இருப்பினும் சுனிதாவுக்கு ஏற்ற ஒரு சூட் இப்போது சுற்றுப்பாதையில் உள்ளது, அவர் அந்த உடையை அணிந்து பார்த்தார். அது அவருக்கு நன்றாகப் பொருந்துகிறது. க்ரூ-9 விண்கலத்தில் வில்மோருக்கு உடை அனுப்பபடும் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“