போயிங் நிறுவனம் தயாரித்த புதிய ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் சோதனை பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். வெற்றிகரமாக விண்வெளி நிலையம் சென்ற அவர்கள் பூமி திரும்ப இருந்த நிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமி திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கி உள்ளனர்.
வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் அடுத்தாண்டு பிப்ரவரியில் பூமி திரும்புவார்கள் என நாசா அறிவித்தது. இந்தநிலையில், அமெரிக்காவில் உள்ள தொடக்கப் பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆன்லைன் நிகழ்ச்சியில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தவாறு சுனிதா வில்லியம்ஸ் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது, விண்வெளியில் ஜீரோ கிராவிட்டியில் தண்ணீர் உள்பட திரவ பொருட்களை விண்வெளி வீரர்கள் எப்படி குடிப்பார்கள் என்பது குறித்து சுனிதா வில்லியம்ஸ் மாணவர்களுக்கு விளக்கி காட்டினார்.
அதில், அவர் ஒரு pouches எடுக்கிறார். அது முற்றிலும் மூடப்பட்டதாக உள்ளது. நடுவில் நீண்ட ஸ்ட்ரா உள்ளது. அந்த தண்ணீர் பையை அழுத்திய உடன் தண்ணீர் நீர்த்துளிகளாக வெளியில் வந்து மிதக்கிறது. அவர் pouches இருந்து தண்ணீர் குடிக்கிறார். பிறகு மிதந்து கொண்டிருக்கும் அந்த நீர்த்துளிகளையும் குடிக்கிறார். ஜீரோ கிராவிட்டியில் காற்று இல்லை என்பதால் தண்ணீர் மிதக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“