மீண்டும் விண்வெளி செல்லத் தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் ஸ்பேஸ்கிராப்ட்டை விண்வெளிக்கு செலுத்தும் முனைப்பில் நாசா விண்வெளி மையம்

By: August 4, 2018, 11:31:36 AM

NASA commercial spacecraft – ல் விண்வெளி செல்ல இருக்கும் ஒன்பது பேர் கொண்ட குழுவின் பெயரை நேற்று வெளியிட்டது நாசா ஆராய்ச்சி மையம்.

இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் உட்பட ஒன்பது பேர் அடங்கிய குழு வருகின்ற 2019ல் விண்வெளி செல்ல இருக்கிறது. 2011ம் ஆண்டிற்கு பின்பு சர்வதேச விண்வெளி நிலையம் செல்ல இருக்கும் முதல் குழு இதுவாகும்.

நாசா விண்வெளி மையத்தில் இருந்து செல்ல இருக்கும் இந்த குழுவிற்கான ஸ்பேஸ்கிராப்டினை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.

சிஎஸ்டி – 100 ஸ்டார்லைனர் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் கேப்சியூல் என இரண்டு வித்தியாசமான விமானங்களை இந்த பயணத்திற்காக தயாரித்து உள்ளது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.

NASA commercial spacecraft ல் விண்வெளிக்கு செல்ல இருக்கும் ஆராய்ச்சியாளர்கள்?

ஜோஷ் கஸ்ஸாடா ( 45 ), சுனிதா வில்லியம்ஸ் ( 52), ராபர்ட் பென்கென் (48), டக்லஸ் ஹர்லே (51), எரிக் போயி (53), நிக்கோலே மன் (41), க்றிஸ்டோபர் ஃபெர்குசென் (56), விக்டர் க்ளோவர் (42), மைக்கேல் ஹாப்கின்ஸ் (49) – இந்த 9 பேர் கொண்ட குழு இதில் பயணிக்க உள்ளனர்.

மேலும் இவர்களுடன் ரஷ்யாவைச் சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளர்களும் பயணிப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களின் பெயர் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

To read this article in English 

இதில் சுனிதா வில்லியம்ஸ் ஏற்கனவே இரண்டு முறை சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்தவர். மேலும் 321 நாட்கள் அங்கு தங்கியிருந்து 2012ம் ஆண்டு பூமிக்கு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பயணிப்பவர்கள் அனைவரும் நாசா, ஸ்பேஸ்எக்ஸ், மற்றும் போயிங் நிறுவனத்தில் தொடந்து பல வருடங்களாக வேலை செய்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோஷ் கஸ்ஸாடாவிற்கு இது முதல் விண்வெளிப் பயணமாகும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Sunita williams fly nasa commercial spacecraft

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X