போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தின் குழு சோதனை பயணமாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் நாசாவின் மற்றொரு வீரர் பட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.
முதல் முறையாக விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்ட போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தை சோதனை செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
கடந்த ஜுன்-5ம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. திட்டதின் படி, விண்கலத்தை ஆய்வு செய்து 1 வாரத்திற்கு பின் ஜுன்-14ம் தேதி அதே விண்கலத்தில் பூமி திரும்ப இருந்தனர். ஆனால் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோர் பூமி திரும்ப முடியாமல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு பயணம் செய்த போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் தொடர் தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொண்டதையடுத்து, அவர் பூமிக்குத் திரும்ப திட்டமிடப்பட்டது மீண்டும் தாமதமாகியுள்ளது என்று நாசா தெரிவித்தது.
தாமதத்திற்கு பின் ஜுன் 26-ம் தேதி அவர்களை பூமிக்கு திரும்ப நாசா திட்டமிட்டிருந்த நிலையில் அந்த திட்டமும் தற்போது தாமதமாகி உள்ளது. இப்போது, நாசா எந்த புதிய தேதியையும் நாசாவால் வெளியிடப்படவில்லை.
ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஐந்து ஹீலியம் கசிவுகள் கண்டறியப்பட்டதையடுத்தும், அதன் 28 உந்துவிசைகளில் ஐந்து த்ரஸ்டர்கள் சிக்கல்களை எதிர்கொண்டதையடுத்தும், நாசா சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழு பூமி திரும்புவதை நிறுத்தியது. விண்கலம் பூமிக்கு பாதுகாப்பாக திரும்புவதற்கு குறைந்தபட்சம் நன்றாக இயக்கக் கூடிய 14 த்ரஸ்டர்கள் தேவை.
இப்போதைக்கு, வில்லியம்ஸ் மற்றும் அவரது குழு புட்ச் வில்மோர் இருவரும் மற்ற ஏழு குழு உறுப்பினர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பாதுகாப்பாக உள்ளனர். ISS என்பது "விண்வெளியில் உள்ள ஒரு சிறிய நகரம்" ஆகும், இது ஒரு கால்பந்து மைதானத்தின் அளவு ஆகும், இது பல விண்வெளி நிறுவனங்களின் விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்துகின்றனர்.
ஒரு செய்தியாளர் சந்திப்பில், நாசா கூறுகையில், " இதற்கு சற்று நேரம் எடுக்கிறது, எங்கள் நிலையான பணி மேலாண்மை குழு செயல்முறையைப் பின்பற்றி வருகிறது" என்று கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“