Super Blood Wolf Moon Lunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன் வருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ம் தேதிகளில் தோன்ற இருப்பதால் வானிலை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஸ்டார் கேசர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
ப்ளட் மூன் என்றால் அனைவருக்கும் தெரியும். ஆனால் அது என்ன வுல்ஃப் மூன் ? அமெரிக்க பூர்வ குடிகள், குளிர்காலத்தில் வரும் பௌர்ணமி நிலவை வுல்ஃப் மூன் என்று அழைப்பது வழக்கம்.
ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம் என்பது, சூரியனுக்கு, சந்திரனுக்கும் நடுவில் பயணிக்கும் போது, சூரியனில் இருந்து நிலவிற்கு கிடைக்கும் ஒளி தடைப்பட்டு, பூமியின் நிழலானது நிலவின் மேல் விழும். அப்போது நிலவு சிவப்பு நிறத்தில் தெரியும். இதனை ப்ளட் மூன் என்பது வழக்கம்.
மற்ற காலங்களை விட, இப்போது பௌர்ணமி நிலவு பூமிக்கு மிகவும் நெருக்கத்தில் வலம் வரும். இது போன்ற ப்ளட் மூன் மே 26, 2021ம் ஆண்டு தான் தோன்றும். கடந்த வருடம் ஜூலை 27ம் தேதி ப்ளட் மூன் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Blue Moon, Black Moon, Blood Moon, மற்றும் Super Moon பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சங்கள்!
Super Blood Wolf Moon Lunar Eclipse
இந்த சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகணம் அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்ரிக்கா போன்ற நாட்டு மக்களால் தெளிவாக காண இயலும்.
ஆசியாவில் நிறைய பகுதிகளில் இந்த அதிசய நிகழ்வை காண இயலாது.
ஜனவரி 20ம் தேதி நள்ளிரவு 11:41 மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் காளை வரை நீடிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திர கிரக நிகழ்வானது மூன்றரை மணி நேரம் நிகழும்.