முன்னதாக அறிவித்தபடி, இந்த ஆண்டு நாம் தொடர்ச்சியாக நான்கு சூப்பர் மூன்ள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கில் முதலாவது ஆகஸ்ட் 19, திங்கட்கிழமை இந்திய நேரப்படி அதிகாலை 12:00 மணிக்கு நிகழ உள்ளது. சுவாரஸ்யமாக, இது ஒரு சூப்பர் மூன் ப்ளூ மூனாக இருக்கும்.
நாசாவின் கூற்றுப்படி, சந்திரன் பூமியை நெருங்கும் 90 சதவீதத்திற்குள் இருக்கும் போது ஒரு சூப்பர் மூன் ஏற்படுகிறது. முழு சூப்பர் மூன்கள் ஆண்டின் பிரகாசமான மற்றும் மிகப்பெரிய முழு நிலவுகளாக அறியப்படுகின்றன. இது வழக்கமான நிலவை விட 30 சதவீதம் பிரகாசமாகவும் 14 சதவீதம் பெரியதாகவும் தெரிகிறது.
மறுபுறம், இரண்டு வகையான ப்ளூ மூன் உள்ளன. ப்ளூ என்பதால் நிலவு ப்ளூ நிறத்தில் இருக்கும் என்று அர்த்தம் இல்லை. நான்கு முழு நிலவுகளைக் கொண்ட ஒரு பருவத்தில் மூன்றாவது முழு நிலவு ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட் 19 ஆம் தேதி காணக்கூடிய ப்ளூ மூன் வகை இதுவாகும்
சூப்பர் மூன் ப்ளூ மூனை எங்கே பார்க்கலாம்?
இந்த நிகழ்வு 3 நாட்கள் நடைபெற உள்ளது. எவ்வாறாயினும், நாசாவின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் புதன் அதிகாலை வரை சுமார் மூன்று நாட்களுக்கு இது முழுமையாகத் தோன்றும். இந்தியாவில், ஆகஸ்ட் 19 இரவு மற்றும் ஆகஸ்ட் 20 அதிகாலை வரை நாம் இந்த அரிய நிகழ்வை பார்க்க முடியும்.
ஆங்கிலத்தில் படிக்க: Supermoon blue moon rising on August 19: Where to spot it and how to get the best view
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“