பாரிய நட்சத்திரங்கள் வெடித்து சிதறி மரணமடைவதற்கும் கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்களின் உருவாக்கத்திற்கும் இடையே நேரடி தொடர்புகளை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர், அவை பிரபஞ்சத்தில் மிகவும் கச்சிதமான மற்றும் மர்மமான பொருட்களாகும்.
இரண்டு குழுக்கள் அருகிலுள்ள விண்மீன் மண்டலத்தில் ஒரு சூப்பர்நோவா வெடிப்பின் உடனடி விளைவைக் கவனித்தனர் மற்றும் மர்மமான சிறிய பொருளின் ஆதாரங்களைக் கண்டறிந்தனர்.
குழுக்கள் இரண்டு தொலைநோக்கிகளிலிருந்து தரவைப் பயன்படுத்தின - ஐரோப்பிய தெற்கு கண்காணிப்பகத்தின் மிகப் பெரிய தொலைநோக்கி (VLT) மற்றும் ESO இன் புதிய தொழில்நுட்ப தொலைநோக்கி (NTT) ஆகியவற்றில் இருந்து தரவுகள் பெற்றனர்.
நமது சூரியனை விட மிகப் பெரிய நட்சத்திரங்கள் தங்கள் வாழ்நாளின் முடிவை அடையும் போது, அவற்றின் சொந்த ஈர்ப்பு அவற்றை மிக வேகமாக சரியச் செய்கிறது, அது ஒரு சூப்பர்நோவா எனப்படும் violent வெடிப்பை ஏற்படுத்துகிறது. வெடிப்புக்குப் பிறகு, நட்சத்திரத்தின் அதி அடர்த்தியான கோர் அல்லது "சிறிய எச்சம்" மட்டுமே எஞ்சியுள்ளது என்று வானியலாளர்கள் கருதுகின்றனர்.
மேலும், அந்த நட்சத்திரம் எவ்வளவு பெரியதாக இருந்தது என்பதைப் பொறுத்து, எச்சம் ( remnant) நியூட்ரான் நட்சத்திரமாகவோ அல்லது கருந்துளையாகவோ மாறும் எனக் கூறுகின்றனர்.
ஒரு நியூட்ரான் நட்சத்திரம் மிகவும் அடர்த்தியான ஒரு பொருளாகும், அதன் ஒரு டீஸ்பூன் பொருள் பூமியில் ஒரு டிரில்லியன் கிலோகிராம் எடையுள்ளதாக இருக்கும். கருந்துளை இன்னும் அதிக அடர்த்தியான புவியீர்ப்பு விசையுடன் இருப்பதால், ஒளியினால் கூட தப்பிக்க முடியாது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/science/supernova-missing-link-black-hole-neutron-stars-9106510/
இந்த சிறிய remnant கோட்பாடு ஒரு நட்சத்திரம் வெடிக்கும் நிகழ்வுகளின் சங்கிலியைப் பற்றிய பல தரவுகளின் கீழ் உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் அனைத்துதரவுகளையும் ஒன்றாக இணைத்து, வெடிப்பிலிருந்து தப்பிய சூப்பர்நோவாவின் துணை நட்சத்திரத்துடன் ஒரு சிறிய எச்சம் தொடர்புகொள்வதால் இந்த முறை ஏற்படுகிறது என்று முடிவு செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.