எதிரிகளை தாக்கி அழிக்கும் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை ஓட்டம் வெற்றி

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது இந்த சூப்பர்சோனிக் ஏவுகணை

Supersonic Interceptor Missile Test

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் ஏவுகணை ( Supersonic interceptor missile ) -ன் சோதனை ஓட்டம் வெற்றியடைந்திருக்கிறது. எதிரிகளை தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணையின் சோதனை ஓட்டம் ஒடிசாவில் இருக்கும் பாலசோர் பகுதியில் நடத்தப்பட்டிருக்கிறது.

எதிரிகளின் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

டாக்டர் அப்துல் கலாம் தீவில் இயங்கிவரும் இந்த சோதனை ஓட்டப்பகுதியின் நான்காவது ஏவு தளத்தில் இருந்து காலை 11.24 மணிக்கு இந்த சோதனை ஓட்டத்தினை மேற்கொண்டனர்.

குறைந்த தூரத்தில் செயல்படும் எதிரிகளின் இலக்கு, அல்லது அருகில் வந்து தாக்குதல் நடத்த இருக்கும் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது இந்த ஏவுகணை.

இந்த ஏவுகணைக்கு இன்னும் சரியான பெயர் சூட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க

இந்த ஏவுகணையின் சிறம்பசங்கள்

7.5 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணையில் நேவிகேசன் இருக்கிறது. அதனுடன் ஹை-டெக் கம்ப்யூட்டர், எலெக்ட்ரோ மெக்கானிக்கல் ஆக்டிவேட்டருடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மொபைல் லாஞ்ச்சர் உதவியுடன் தானாகவே ட்ராக் இலக்கினை தேர்வு செய்யும் திறன் கொண்டது இந்த ஏவுகணை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close