ரூ15,000 விலையில் சூப்பரான ‘டேப்லட்’ஸ்: ஆன்லைன் கிளாஸுக்கு டாப் சாய்ஸ்

Tablets price under 15000 rupees : கொரோனா காலம் என்பதால் டேப்லெட்களின் தேவை கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது.

Smartphones, Tablet, budget tablets, Huawei Mediapad T5, Samsung Galaxy Tab A, Panasonic Tab 8 HD, Lenovo Tab M10 HD, Alcatel 3T 10, tablets under 15000, affordable tablets
Tablet Tamil News

Tablet Tamil News, low budget tablets price under 15000 rupees: ஸ்மார்ட்போன்களின் டிஸ்பிளே மிகச்சிறிய அளவினதாக இருந்த நிலையில், டேப்லெட்டுகள், மக்களிடையே பிரபலம் அடைந்தது. டேட்லெட்டுகளில் டிஸ்பிளே நீளம் அதிகமாகவும், பிடிப்பத்றகு வசதியாக திக் பெசல்கள் இருந்ததால், அதற்கு மக்களிடையே அதிக வரவேற்பு இருந்தது. ஆனால், தற்போதைய நிலையிலோ, சாம்சங் நோட் 20 அல்ட்ரா, ஒன்பிளஸ் 8 புரோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் டிஸ்பிளே கிட்டத்தட்ட 7 இஞ்ச்சை ஒத்த அளவில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, இத்தகைய ஸ்மார்ட்போன்களை நாம் பாப்லெட் என்று அழைத்து வந்தோம். அதாவது ஸ்மார்ட்போனுக்கும், டேப்லெட்டுகளுக்கும் இடைப்பட்ட அளவினை கொண்டது ஆகும். இந்நிலையில், தற்போது கொரோனா காலம் என்பதால் அலுவலக வேலை, கேம்ஸ்கள் விளையாட, ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மற்றும் ஓடிடியில் படங்கள் பார்க்க என டேப்லெட்களின் தேவை கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது.

முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், டேப்லெட்களில் புதிய வரவும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இதனிடைய, பட்ஜெட் டேப்லெட்கள் குறித்த விபரங்களை இந்த கட்டுரையில் காண்போம்.

Tablets price under 15000 rupees

Huawei Mediapad T5

2019ம் ஆண்டின் முற்பகுதியில் Huawei Mediapad T5 டேப்லெட் அறிமுகப்படுத்தப்பட்டது. 10.1 இஞ்ச் 1080P புல்ஹெச்டி விவிட் டிஸ்பிளே ஸ்கிரீன் வித் 1920 x 1200 பிக்சல் ரெசலுசன். 76.4 சதவீதம் ஸ்கிரீன் டு பாடி ரேசியோ, 16:10 ஆஸ்பெக்ட் ரேசியோ. ஆக்டோ கோர் புராசசர், ஆண்ட்ராய்ட் 8 ஓரியோ ஆபரேடிங் சிஸ்டம் வித் மேற்புறத்தில் EMUI 8.0 skin. 3 ஜிபி ராம், 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் (256 ஜிபி வரை நீட்டித்துக்கொள்ளும் வசதி) உள்ள இதன் விலை ரூ.14,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Tablet Tamil News low budget tablets price under 15000 rupees டேப்லட்
Tablet Tamil News

Huawei Mediapad 4ஜி தொழில்நுட்பத்திலும் இயங்கும் திறன் கொண்டது. 5எம்பி முன்பக்க கேமரா, 5100 மெகாஹெர்ட்ஸ் பேட்டரி. 4டி சரவுண்ட் சவுண்டு உள்ள ஐயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. ஆண்ட்ராய்ட் அப்டேட் செய்ய முடியாது என்பது இதன் ஒரு மைனஸ் ஆகும்.

Samsung Galaxy Tab A

2019ம் ஆண்டின் முற்பகுதியில் Samsung Galaxy Tab A டேப்லெட் அறிமுகப்படுத்தப்பட்டது. 10.1 ஸ்போர்ட்ஸ் இஞ்ச் டிஸ்பிளே டிஸ்பிளே வித் 1920×1200 பிக்சல ரெசலுசன். எக்ஸினோஸ் 7904 புராசசர், 3 ஜிபி ராம், 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், மெமரி கார்டின் உதவியுடன் 400 ஜிபி வரை நீட்டித்துக்கொள்ளும் வசதி, டால்பி 3டி அட்மாஸ் சரவுண்ட் சவுண்ட் வசதி உள்ள டுயல் ஸ்பீக்கர்கள். 8 எம்பி சென்சார் உடனான பின்பக்க கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா. 6150 மெகாஹெர்ட்ஸ் பேட்டரி உள்ளது. 4 ஜி சப்போர்ட் செய்யும் 8 இஞ்ச் டேப்லெட் ரூ.14,999க்கும், 4ஜி சப்போர்ட் செய்யாத 8 இஞ்ச் டேப்லெட்டின் விலை ரூ. 11,999க்கும் சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனையாகி வருகிறது.

 

Tablet Tamil News low budget tablets price under 15000 rupees டேப்லட்
tablets price under 15000 rupees

Panasonic Tab 8 HD (12,490)

4 ஜி சப்போர்ட்டுடனான டேப்லெட் தேவைப்படுவோருக்கு Panasonic Tab 8 HD மிகச்சிறந்த தேர்வாக உள்ளது. 8 இஞ்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்பிளே வித் 1280×800 பிக்சல் ரெசலுசன், ஆண்ட்ராய்ட் பை வி 9.0 ஆபரேடிங் சிஸ்டம், மீடியாடெக் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் புராசசர். 3 ஜிபி ராம், 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், மெமரி கார்டின் உதவியுடன் 512 ஜிபி வரை நீட்டித்துக்கொள்ளும் வசதி. 5010 மெகாஹெர்ட்ஸ் பேட்டரி, 8 எம்பி பின்பக்க கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா கொண்ட இந்த டேப்லெட்டின் விலை ரூ.12,490 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Tablet Tamil News low budget tablets price under 15000 rupees டேப்லட்
low budget tablets

Lenovo Tab M10 HD

Lenovo Tab M10 HD டேப்லெட் 10 இஞ்ச் ஸ்கிரீன் வித் 1280 x 800 பிக்சல் ரெசலுசனுடன் வருகிறது. ஆண்ட்ராய்ட் பை ஆபரேடிங் சிஸ்டம்,விதே் 2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 குவாட் கோர் புராசசர். 2 ஜிபி ராம், 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 256 ஜிபி வரை நீட்டித்துக்கொள்ளும் வசதி, 4850 மெகாஹெர்ட்ஸ் பேட்டரி, 5 எம்பி பின்பக்க கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா, 4ஜி சப்போர்ட்டுடனான டேப்லெட்டின் விலை ரூ.14,999க்கும் 4ஜி சப்போர்ட் இல்லாத டேப்லெட்டின் விலை ரூ.10,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Tablet Tamil News low budget tablets price under 15000 rupees டேப்லட்
Tablet Tamil News

Alcatel 3T 10

10 இஞ்ச் டிஸ்பிளே வித், 800×1280 பிக்சல் ரெசலுசனுடன் Alcatel 3T 10 டேப்லெட் உள்ளது. இதில், 1.28 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் MT8765B புராசசர் உள்ளது. 2 ஜிபி ராம், 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 128 ஜிபி வரை நீட்டித்துக்கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் 9.0 பை ஆபரேடிங் சிஸ்டம், 4080 மெகாஹெர்ட்ஸ் பேட்டரி, 2 எம்பி முன்பக்க மற்றும் பின்பக்க கேமரா. 4ஜி வசதி உள்ள இந்த Alcatel 3T 10 டேப்லெட்டின் விலை ரூ.12,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Tablet Tamil News low budget tablets price under 15000 rupees டேப்லட்
Tablet Tamil News

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tablet tamil news low budget tablets price under 15000 rupees

Next Story
‘ரிச்’ லுக்… செம்ம வாட்ச்…! சாம்சங் கேலக்ஸி 3- கேலக்ஸி பட்ஸ் இப்போது இந்தியாவில்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express