தமிழ்நாட்டில் ஓலா, உபர், ரேபிடோ உள்ளிட்ட கால் டாக்ஸிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வழங்கும் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். குறிப்பாக நகரங்களில் பீக் ஹவர்ஸில் கால் டாக்ஸிகளின் தேவை அதிகம். அந்த வகையில் புதிதாக தற்போது தமிழ்நாடு மீட்டர் ஆட்டோ என்ற புதிய ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி, சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் மீட்டர் ஆட்டோ ஓட்டுபவர்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதல் 1.8 கி.மீ-க்கு அடிப்படைக் கட்டணம் ரூ. 49 மற்றும் அதற்குப் பிறகு பயணிக்கும் ஒவ்வொரு கி.மீ.க்கும் பயணிகள் ரூ.16 செலுத்த வேண்டும்.
இதுதவிர நிமிடத்திற்கு 1 ரூபாய் காத்திருப்பு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. போக்குவரத்து சிக்னல்களில் காத்திருப்பு நேரம், கடைகள் அல்லது ஹோட்டல்களில் வழியில் நிறுத்துதல் போன்றவற்றில் இதில் வசூலிக்கப்படும்.
சராசரியாக, இந்த மீட்டர் ஆட்டோக்களில் நகரத்தில் 5 கி.மீ பயணம் செய்ய ரூ. 110 செலவாகும். இதில், ஆப்பை இயக்கும் நிறுவனம், சேவைக் கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டியாக ஓட்டுநர்களிடம் இருந்து ரூ.9 வசூலிக்கும்.
இது தவிர நிறுவனம் வேறு எந்த கமிஷனும் வாங்குவதில்லை. பயணத்தில் மீதமுள்ள ரூ. 101 டிரைவருடையது. நிறுவனத்தின் தலைவர் ஆர்.கே.சேதுராமன் கூறுகையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்ப மாதிரியை பின்பற்றுவதே யோசனையாகும், ஆனால்
இந்த குழுவின் தலைவர் ஆர்.கே.சேதுராமன் கூறுகையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்ப மாதிரியை பின்பற்றுவதே யோசனையாகும், ஆனால் அவர்கள் செய்வது போல் இல்லாமல் டிரைவருக்கு பாதிப்பு ஏற்படாமல் செய்ய வேண்டும் என்று நினைத்தோம்.
நாங்கள் 2019 இல் இந்த யோசனையை அறிமுகப்படுத்தினோம், ஆனால் பல குறைபாடுகள் இருந்தன, அவற்றை ஒவ்வொன்றாக சரிசெய்ய நான்கு முழு ஆண்டுகள் ஆனது. இப்போதுதான் எங்களிடம் துல்லியமான கட்டணம், பிக்அப் அல்லது டிராப் இடங்களை வழங்கும் ஆப் உள்ளது," என்று அவர் கூறினார்.
இப்போதும், பயன்பாட்டில் சில குறைபாடுகள் உள்ளன. உதாரணமாக, முன்பதிவு செய்த பிறகு, பயணிகள் ஆட்டோக்களை live track செய்ய முடியாது. இந்த ஆப் கூகுள் மேப்ஸை நம்பி இயக்கப்படுகிறது என்றார்.
தொடர்ந்து, தற்போது, 4,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் இந்த செயலியில் தங்களைப் பதிவு செய்திருந்தாலும், அவர்களில் 10% பேர் மட்டுமே தொடர்ந்து பயணங்களை பெறுகின்றனர்.
நகரத்தில் 90,000-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளன, அவை சராசரியாக ஒரு நாளைக்கு 5-7 பயணங்கள் எடுக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“