scorecardresearch

ஃபாரினில் இருந்து வந்த ஹைடெக் கேமரா: பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா வீட்டு ரகசியம்

நடிப்பு மட்டுமல்லாமல் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹேமா ராஜ்குமார் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

ஃபாரினில் இருந்து வந்த ஹைடெக் கேமரா: பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா வீட்டு ரகசியம்

சமீபத்தில் தனது கணவர் வெளிநாட்டில் இருந்து வாங்கி வநை்த ஹைடெக் கேமராவை அவருக்கு தெரியாமல் அன்பாக்ஸ் செய்து பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை மீனா வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் ஹேமா ராஜ்குமார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் 2-வது மருமகளாகன இவர், வில்லியா அல்லது நல்லவரா என்ற குழப்பம் சீரியலின் தீவிர ரசிகர்களுக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த அளவிற்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

நடிப்பு மட்டுமல்லாமல் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹேமா ராஜ்குமார் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதேபோல் ஹேமாஸ் டைரி என்ற யூடியூப் சேனலில் விழிப்புணர்வு தொடர்பான வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில் தனது கணவர் துபாயில் இருந்து வாங்கி வந்த ஹைடெக் கேமராவை அவருக்கு தெரியாமல் அன்பாக்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த கேமரா இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 50 ஆயிரத்திற்கு அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் புது வீட்டிற்கு குடிபெயர்ந்த ஹேமா ராஜ்குமார் அங்கிருந்து இந்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இதில் பேசும் அவர், சமீபத்தில் எனது கணவர் துபாய் சென்றிருந்தார். போகும்போது ஒரு சூட்கேசுடன் போன அவர், வரும்போது எக்ஸ்ராவா ஒரு சூட்கேஸ் கொண்டு வந்திருந்தார். இப்போது அவர் வீட்டில் இல்லை அதனால் அந்த எக்ஸ்ட்ரா சூட்கேஸ் என்ன என்பதை இப்போது பார்ககலாம்.

இந்த சூட்கேஸ் ஒரு கேமரா. கோப்ரோ கேமரா ஹைடெக் கேமராவான இதில் நாம் வீடியோ எவ்வளவு ஷேக் செய்து எடுத்தாலும் வீடியோவில் ஷேக் இல்லாமல் தெளிவாக காண்பிக்கும். இந்த கேமராவை தண்ணிக்குள் வைத்தும் விடியோ ஷூட் செய்யலாம். இந்த கேமராவின் மதிப்பு துபாய் பணத்திற்கு 2500 திராம்ஸ் என்றால் இந்திய ரூபாய்க்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த பாக்ஸ் மேலே இந்த கேமராவின் சிறப்பு அம்சங்கள் தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே கேமரா இந்தியாவின் விலையில் ஒப்பிடும்போது துபாயில் விரை குறைவாகத்தான் உள்ளது. இந்த கேமராவின் விலை இந்தியாவில் 52990 ரூபாய். ஆனால் தூபாயில் வாங்கிய திராம்ஸ் இந்திய ரூபாய் மதிப்பு 33 ஆயிரம் என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து கணவர் வாங்கி வந்த கேம் பாக்ஸை பிரித்து அதையும் அன்பாக்ஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress hema rajkumar unboxing high tech camera