scorecardresearch

TNEB- Aadhar Link: ஆதார் இணைப்பது ஈஸி; மின் கட்டணம் செலுத்தும் போதே வேலையை முடியுங்க!

தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

TNEB- Aadhar Link: ஆதார் இணைப்பது ஈஸி; மின் கட்டணம் செலுத்தும் போதே வேலையை முடியுங்க!

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மின்கட்டணம் செலுத்தும்போதே ஆதார் எண்ணையும் இணைக்க மின்வாரியத்தின் இணையத்தில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு மின் இணைப்புக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த மின்சார மாணியம் தொடர்ந்து பெற வேண்டும் என்றால் ஆதார் எண்ணை தங்களது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அரசு தரப்பில் உத்தரவிட்ப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் ஆதார் எண் இணைக்கும் பணியை செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருப்பவர்கள் ஒரே ஆதார் எண்ணை இணைத்தால் ஏதேனும் சிக்கல் வருமோ என்று யோசித்து வருகின்றனர்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு வைத்துள்ளவர்கள் தங்களின் அனைத்து மின் இணைப்பு எண்ணிற்கும் ஒரே செல்போன் எண்ணைத்தான் கொடுத்துள்ளனர். அதனால் ஆதார் எண்ணை இணைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறியுள்ளனர். மேலும் வாடகை வீட்டில் தங்கியிருப்போது தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கும் பணிக்காக தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் சார்பில் மின்கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் https://adhar.tnebltd.org/adharpload/ என்ற புதிய பக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் நேரடியாக மின்கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் மின்கட்டணம் செலுத்த போகும்போது தங்களது ஆதார் அட்டையின் நக லை எடுத்துச்சென்று மின்கட்டணம் செலுத்தும்போதே ஆதார் எண்ணை அதனுடன் இணைத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu easy way to link aadhar number with eb number in tamil

Best of Express