தமிழகத்தில் இலவச மின்சாரம், மானிய விலை மின்சாரம் பெறுபவர்கள் என அனைத்து பயனர்களும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இதற்காக அந்தந்தப் பகுதிகளில் உள்ள மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் அரசு சார்பில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைத்து வருகின்றனர்.
மின் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளம் www.tangedco.gov.in என்ற பக்கத்தில் இ.பி - ஆதார் இணைக்கப்படுகிறது. மின் கட்டணம், புதிய மின் இணைப்பு, மின் இணைப்புபெயர் போன்ற பல்வேறு சேவைகளுக்கு இதே இணைப்பை பயன்படுத்துவதால் சர்வர் கோளாறு ஏற்படுகிறது. பயனர்கள் சிரமப்படுவதாக புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், பயனர்கள் வசதிக்காக ஆதார் எண்ணை இணைக்க மட்டும், https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள முகவரியை, மின் வாரியம் நேற்று வெளியிட்டது. இ.பி - ஆதார் இணைப்பவர்கள் இந்த இணைய தளத்தை பயன்படுத்தி ஈஸியாக இணைக்கலாம்.
தமிழகத்தில் மொத்தம் 2.68 கோடி மின் நுகர்வோர் இருக்கும் நிலையில், நேற்று மாலை வரை, 51 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைத்து உள்ளனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil