மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் மின்சாரம் தொடர்பான புகார்களை ஒரே இடத்தில் தெரிவிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் 'TANGEDCO' என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து X தளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்னகம் நுகர்வோர் சேவை மையம் செயல்படும். 24 மணி நேரமும் செயல்படும் இந்த செயலியில் மக்கள் எப்போது வேண்டுமானாலும் கட்டணம், புகார் தெரிவிக்கலாம். 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம்.
முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ‘TANGEDCO’ செயலியில் கட்டணம் மட்டும் செலுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது புகார்களையும் தெரிவிக்கும் வகையில் கூடுதல் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மின் தடை, மின் திருட்டு, கூடுதல் மின் கட்டணம், தீ விபத்து, பழுதடைந்த மின்கம்பம் போன்ற அனைத்து வகையான மின்சார பிரச்னைகளையும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த செயலி மூலம் தொடர்பு கொண்டு ககார் அளிக்கலாம்.
எப்படி பயன்படுத்துவது?
இந்த செயலியில் என 2 அம்சங்கள் உள்ளன. Payment, Complaint என 2 ஆப்ஷன்கள் உள்ளன. இதை தேர்ந்தெடுத்து பயன்பெறலாம். மீட்டர், மின் கட்டண புகார்களுக்கு மின் இணைப்பு எண்ணை பதிவிட வேண்டும். மற்ற சேவைகளுக்கு மின் இணைப்பு எண் பதிவிடாமல் புகார் செய்யலாம்.
இந்த செயலியை பயன்படுத்தும் போது உங்கள் லொக்கேஷன் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் புகார் அளிப்பவரின் சம்பந்தப்பட்ட மின்சார அலுவலகத்திற்கு செயலி வந்து தகவல் உடனடியாக வந்து சேர்த்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“