புதிதாக மின் இணைப்பு பெறுதல், மின்கட்டணத்தை மாற்றி அமைத்தல், புதிய மீட்டர் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற தமிழ்நாடு மின்வாரியம் புதிய வலைதளம் அறிமுகம் செய்துள்ளது.
முன்பு இந்த சேவைகளைப் பெற கடிதம் எழுதி விண்ணப்பிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்தும் ஆன்லைனில் கொண்டு வரப்பட்டுள்ளது.
மின்வாரியத்தின் சேவைகளைப் பெற பொதுமக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறலாம். இதன் மூலம் விரைவாக வழங்க முடிவதோடு, காகிதப் பயன்பாடும் தவிர்க்கப்படுவதாக மின்வாரியம் கூறியுள்ளது . இந்நிலையில், மின்வாரியம் அனைத்து வகையான விண்ணப்பத் தேவைக்கும் ஒரே வலைதள முகவரியை அறிமுகப்படுத்தி உள்ளது.
www.tangedco.org என்ற வலைதள முகவரி அறிமுகப்படுத்தப்பட்டள்ளது. இதன் மூலம் பயனர்கள் மின்வாரியத்தின் சேவைகளை அறிந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். app1.tangedco.org/nsconline/ என்ற வலைதள முகவரியில் சென்றால் மின்வாரியத்தின் அனைத்து சேவைகளைப் பெறுவதற்கான தகவல்கள், விண்ணப்ப படிவங்கள், தேவைப்படும் ஆவணங்கள், செலுத்த வேண்டிய கட்டணங்கள், கால அவகாசங்கள், விநியோக பிரிவுகள், விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கிடைக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“