ஆப்பிளின் ஐபோன் உற்பத்திக்கான விருப்பங்களில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது, ஏனெனில் டாடா குழுமம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு நாட்டில் சாதனங்களை தயாரிக்க உள்ளது.
இந்த நிலையில். இந்த திட்டம் இரண்டரை ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்றும், டாடா குழுமம் மற்றும் பிற இந்திய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் உலகளாவிய பிராண்டுகளுடன் கூட்டு சேரும் முயற்சிகளுக்கு அரசு ஆதரவளிக்கும் என்றும் மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று (அக்.27) தெரிவித்தார்.
மேலும், ஆப்பிளின் ஒப்பந்தத் தயாரிப்பாளரான தைவானைச் சேர்ந்த விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் அதன் இந்திய யூனிட்டை டாடா குழுமத்திற்கு 125 மில்லியன் டாலருக்கு விற்க ஒப்புதல் அளித்த பிறகு இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு டாடா குழுமம் Wistron InfoComm Manufacturing (India) Private Limited (WMMI) இல் 100% பங்குகளை வைத்திருக்கும். சம்பந்தப்பட்ட தரப்பினரால் உறுதிப்படுத்தப்பட்டவுடன் தேவையான ஒப்புதல்களைப் பெறுவதற்கு ஒப்பந்தம் தொடரும்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Tata Group to manufacture iPhones in India for global market, announces Rajeev Chandrasekhar
இந்த நடவடிக்கை ஆப்பிளின் மூலோபாயத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது, ஏனெனில் இது பாரம்பரியமாக சீன தொழிற்சாலைகளை நம்பி அதன் பெரும்பாலான புதிய ஐபோன்களை உற்பத்தி செய்து உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகிறது.
இருப்பினும், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போர் மற்றும் அதிகரித்து வரும் சீன தொழிலாளர் செலவுகள், ஆப்பிள் நிறுவனத்தை மாற்று உற்பத்தி ஆதாரங்களைத் தேடத் தூண்டியது. இந்தியா, அதன் பெரிய நுகர்வோர் சந்தை, திறமையான பணியாளர்கள் மற்றும் சாதகமான அரசாங்கக் கொள்கைகளுடன், கவர்ச்சிகரமான விருப்பமாக உருவெடுத்துள்ளது எனக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“