டாட்டா நெக்ஸான் : இந்தியர்களின் மனதை கவர்ந்த கார் இது தான்!

Tata Nexon Compact SUV : இந்த கார்களுக்கு மார்க்கெட்டில் போட்டியாக இருப்பது மகிந்திரா நிறுவனத்தின் XUV300 மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் வெனியூ ஆகும்

Tata Motors Nexon hits 1,00,000 units
Tata Motors Nexon hits 1,00,000 units

Tata Motors Nexon hits 1,00,000 units : டாட்டா மோட்டர்ஸ் நிறுவனத்தின் படைப்பு தான் நெக்ஸான் கார் ஆகும். இந்தியாவில் உருவாக்கப்பட்டு க்ளோபல் என்.சி.ஏ.பி.யின் 5 நட்சத்திர தரச்சான்றிதழை பெற்ற முதல் கார் இதுவாகும். 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த கார் அறிமுகம் ஆனது.

Tata Motors Nexon hits 1,00,000 units

டெல்லியின் எக்ஸ்க்ளூசிவ் ஷோரூமில் இதன் விலை ரூ. 6.58 லட்சத்தில் துவங்கி, 10.96 லட்சம் வரை இந்த கார்கள் விற்பனையாகின்றன.  விற்பனைக்கு வந்த 22 மாதங்கள் ஆன நிலையில் இதுவரையில் 1 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒரு மாதத்திற்கு சராசரியாக 4546 கார்கள் விற்பனையாகி வருகின்றன.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் கார் கோனா குறித்து ஒரு பார்வை

Tata Motors Nexon’s பாதுகாப்பு அம்சங்கள்

குழந்தைகளுக்கு பாதுகாப்பான ரைடினங் தருவதற்கான புள்ளிகளில் 49க்கு 25-ஐயும், இளம் வயதினருக்கான பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதில் 17 மதிப்பெண்களுக்கு 16.06 புள்ளியும் பெற்றுள்ளது.

வடிவமைப்பு

16 இன்ச் டூயல் டோன் 5 ஸ்போக் அல்லாய் சக்கரங்கள் பொறுத்தப்பட்டுள்ளது. ஃப்ளோட்டிங் டிஸ்பிளே மற்றும் ஹர்மான் சௌண்ட் சிஸ்டத்துடன் மிகவும் அசத்தலான ஸ்டைலான உள்கட்டமைப்பு.  ஆண்ட்ராய்ட் ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே, மற்றும் 8-ஸ்பீக்கர் ஹர்மான் சௌவுண்ட் (4 ஸ்பீக்கர்கள், 2 ட்வீட்டர்கள்), ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஸ்டீரிங் மௌண்ட்டட் ஆடியோ கண்ட்ரோல்கள், மல்டி – இன்ஃபோ ட்ரைவர் டிஸ்பிளே என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த கார்.

குறைபாடுகள்

டூயல் ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், ஃப்ரண்ட் பார்க்கிங் சென்சார்கள், வையர்லெஸ் சார்ஜிங், வெண்டிலேட்டட் சீட்கள், க்ரூஸ் கண்ட்ரோ, சன்ரூஃப் போன்ற வசதிகள் இல்லாதது இதில் குறைபாடாகவே உள்ளது.  இந்த கார்களுக்கு மார்க்கெட்டில் போட்டியாக இருப்பது மகிந்திரா நிறுவனத்தின் XUV300 மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் வெனியூ கார் ஆகும்.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பைக் விற்பனை எப்போது தெரியுமா?

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tata motors nexon hits 100000 units in just 22 months

Next Story
சந்திரயான் 2 : புதிய சரித்திரம் படைக்க இருக்கும் 48 நாள் பயணம்!Chandrayaan-2 Vikram Lander separates from Orbiter
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com